சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா- ஜஸ்டின் ரூடோ புலம்பல்

நம் தமிழக மக்களுக்கு நன்றாகவே இவரை தெரியும், இன்னுமோர் பதத்தில் சொன்னால் கனடா தேசத்து சுடலை என்கிற ரீதியில் சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். ஆம் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தான். யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் பல இடங்களில் பற்றி எரியும் விவசாய போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் காலிஸ்தான் தனி நாடு கேட்டு செய்யும் பிரச்சினையில் மூக்கை நுழைத்து ஆதரவு தெரிவித்தார். கூப்பிட்டு எச்சரிக்கை செய்தது இந்தியா. கேட்கவில்லை ரூடோ, ரௌடிதனத்தை கையாளும் கூடத்திற்கே தன் ஆதரவு என்று உறுதியுடன் நின்றார்.

இதோ இன்று அவரது பதவிக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ள போவதாக சொல்லி இருக்கிறார்கள். மனிதர் ஆடிப் போய் இருக்கிறார். போதாக்குறைக்கு தற்போது அவர்கள் தேசத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன; அதற்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனை இரும்பு கரம் கொண்டு அடக்கப் போவதாக அறிவித்தார் ரூடோ. அவ்வளவு தான் பொங்கி எழுந்தனர் அங்கு உள்ள விவசாயிகள். தட்டியுடன் போராட ஒன்று திரண்டு நின்றவர்களை பார்த்தவர்களுக்கு தூக்கி வாரி போட்டது. பத்து இருபது பேர் அல்ல, சுமார் ஐநூறுக்கும் மேல். இதிலும் ஒரு கூத்து நடந்தது, காரணம் பாதிக்கப்பட்ட விவசாயி என்று வந்திருந்தால் நூறு பேர் வரை கூட இருக்காது. ஒவ்வொருவருக்கு ஏக்கர் கணக்கில் நிலம் சொந்தமாக இருக்கிறது.

என்னடா பாதிக்கப்பட்ட விவசாயி என்று வந்திருந்தால் கூட நாற்பது மேல் இருக்காது, இவர்கள் என்னடா வென்றால் ஐநூறு பேர் திரண்டு நிற்கிறார்களே என்று தன் தாடியை சொரிந்து கொண்டு இருந்தாரோ என்னவோ ரூடோ…….. சட்டென்று பொரி தட்டியிருக்கிறது.

ஏனெனில் இதே போன்ற காரியத்தை கடந்த காலத்தில் மலேஷியா பிரதமர் மகாதீர் முகமது செய்ததற்கு முதலில் எச்சரிக்கை இப்படி தான் செய்தது இந்தியா, ஆனால் அவர் கேட்கவில்லை. இரு வாரங்களில் முன்னாள் பிரதமர் என்கிற பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்து விட்டு தான் மறுவேலை பார்த்தார் மோடி. அதே பாணியில் இதுவும் இருக்கிறதே என்று சந்தேகித்து உன்னிப்பாக கவனித்து பார்த்தால் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா தெரிந்தாரோ இல்லையோ, கண்டிப்பாக நம் பிரதமர் மோடி காட்சி கொடுத்து இருப்பார். வாய் அடைத்து போய் இருக்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

மலேஷியா பரவாயில்லை பக்கத்தில் இருக்கும் நாடு, நாமோ பூமி பந்தின் மறு பக்கத்தில் இருக்கிறோம், போதாக்குறைக்கு அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ளவரின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் ஒரு நாடு. இவ்வாறு இருந்தும் இங்கு வைத்தே தன்னை மடக்க முடிகிறது என்றால், மோடி எவ்வளவு சக்தி மிக்கவர் என்று புலம்பி வருகிறாராம்.
காரணம் கனடாவில் தற்போது பிரதமர் பதவியில் உள்ள இவர் பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி கட்சி தயவில் தான் ஆட்சி நடத்தி கொண்டு வருகிறார்.

இப்போதே அவர்களில் பலரும் தனித்தனியாக போன் போட்டு அட்வைஸ் என்கிற ரீதியில் அட்டகாசம் செய்து வருகின்றனராம். இந்தியாவுடன் மோதல் போக்கினை கைவிட வலியுறுத்து வருகின்றனராம், அவர்கள் சொந்த பிரச்சினையில் தலையீடு செய்ய நமக்கு தார்மீக உரிமை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

கூட்டி கழித்து பார்த்தவர், ஏதடா தன் தேசத்தில் இருக்கும் காலிஸ்தான் இயக்கத்தில் உள்ளவர்களை ஆதரிக்க போய் தன் பதவிக்கே வேட்டு வைத்துக்கொண்டோமே என்று புலம்பிக் கொண்டு உள்ளாராம். அதே சமயம் இங்கு இந்தியாவில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களுக்கு தவறான தகவல் தந்து போராட தூண்டி விட்டனர். இதில் உள்ள பயன்பாடுகளை பார்க்கும் போது நாங்கள் நன்றி பாராட்டி கூட்டம் தான் நடத்தி இருக்க வேண்டும், தவறு செய்து விட்டோம் மன்னித்து விடுங்கள் என்று வலியுறுத்தி தெரிவித்து வருகின்றனராம்.

அதற்கேற்ப நேற்று மாலை மத்திய அரசு நிர்வாகம் தெள்ளத்தெளிவாக சட்டத்தினை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்த்து சொல்லி இருக்கிறார்கள். இத்தனை நாளும் இதனை உன்னிப்பாக கவனித்து வந்த வெளிநாட்டு ஊடகங்கள் “எத்தன்டா இந்த மனிஷன்” என்று வாய் விட்டே சொல்லி வருகிறார்களாம்.

மேலும், இந்த சட்டம் குறித்த தெளிவான பார்வை இன்று இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. இத்தோடு கூடுதல் தகவல்களாக மத்திய அரசு விவசாயிகளுக்கு தரும் 6000 ரூபாய் பணம், மற்றும் பல்வேறு விதமான சலுகைகள் பற்றி தெரியவந்திருக்கிறது. இவையெல்லாம் போக இந்திய விவசாய சங்கத்தினருக்கு இத்தனை ஆண்டு காலம் தங்களை எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சி ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்பதை எல்லாம் படம் போட்டு விளங்கியது போல் புரிய வைத்து விட்டனர். விளம்பரங்கள் செலவே இல்லாமல் இதனை சாதித்து இருக்கிறார்கள். இவர்கள் ஏதோ மத்திய அரசை ஒரு வழி பண்ணி விட்டு தான் மறு வேலை என்கிற ரீதியில் யோசித்து வேலை பார்க்க, அவர்களோ இவர்களை அவர்களுக்கு தெரியாமல் வேலை வாங்கி கொண்டு இருக்கிறது என்று தங்களுக்குள்ளேயே பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அதேசமயம் மத்திய அரசு நிர்வாகத்தினருக்கு யார் யாரெல்லாம் விவசாயிகள் போர்வையில் இருந்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்களாகவே தங்களை அடையாளம் காட்டி கொண்டு விட்டனர், இனிமேல் கட்டம் கட்டும் வேலையை மும்மரமாக பார்க்க வேண்டியது தான். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்ததோடு அல்லாமல் கமுக்கமாக இருக்கும் இவர்களின் சாமர்த்தியத்தை மெச்ச தான் வேண்டும் என்று சிலாகிக்க தொடங்கி விட்டனர் வெளிநாட்டு ஊடக பிரமுகர்கள். இவை எதுவும் தெரியாத வண்ணம், சில ஊடகங்கள் “உதிர்ந்தது முல்லை, அதிர்ந்தது சென்னை புறநகர்” என்று அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

IndiaGlitz - Tamil on Twitter: "Meanwhile Indian fans be like #IndvAFG  #ICCWorldCup2019… "

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *