அரசியலுக்கு வர மாட்டேன் என்பவரை அழைப்பது நண்பனுக்கு அழகல்ல.!

அரசியல் இந்தியா சினிமா

ரஜினியுடன் அரசியல் பேசவில்லை என்றும் அரசியலுக்கு வரமாட்டேன் என அவர் ஏற்கனவே கூறிவிட்டதால் அவரை அழைப்பது நண்பனுக்கு அழகல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தாம்பரத்தை அடுத்த சோமங்கலத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 4ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கமல், இதனை தெரிவித்தார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3ஆம் அணி அமைவதற்கான மேகங்கள் கூடி வருவதாக கூறிய அவர், கூட்டணி தொடர்பாக திமுக அதிமுக பேசியதா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்சிகள் தூதுவிட்டதாகவும், ஆனால் தன்னிடம் நேரடியாக பேசவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *