முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் திமுக., தலைவர் ஸ்டாலினின் மகனும், தற்போதைய திமுக., இளைஞரணிச் செயலாளரும் ஆன உதயநிதியின் சசிகலா குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனப் பேச்சுக்காக அவருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்:
அன்று தாத்தா டி.என்.அனந்த நாயகியிலிருந்து ஆரம்பித்து வைத்ததை பேரன் Udhaystalin தொடர்ந்து கொண்டுள்ளார்.
arivalayam சிந்திக்கின்ற பாரம்பர்யமே பெண்களை கேவலப்படுத்துவதாகவே உள்ளது. தலைவர்களே இதை முன்னெடுக்கும் போது தொண்டர்கள் பூங்கோதையை அவமானப் படுத்துவதில் துவங்கி சக பெண் நிர்வாகிகளின் இடுப்பை கிள்ளுவது வரை சாதாரணமாக கடந்து போகிறார்கள்.
எதிர்வினையாக ராசாத்தி அம்மா துவங்கி கனிமொழி, கிருத்திகா வரை பெண்களே இலக்காகிறார்கள். பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் இம்மாதிரி விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள்.
தன் அம்மா வயதிலிருக்கும் சசிகலாவை @Udhaystalin விமர்சனம் செய்கின்ற விதம் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியது. இதை @mkstalin அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. Smt. துர்கா ஸ்டாலின் அவர்களே! செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.
உதயநிதியின் உற்சாகமான சர்ச்சைப் பேச்சு இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை சர்ச்சைக்குரிய விதத்தில் கூறி பேசிய கருத்துகள் அதிமுக.,வினரிடையே கடுங் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.