கிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை? அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.

சினிமா
Karnan behind-the-scenes: Mari Selvaraj creates a village for  Dhanush-starrer | Entertainment News,The Indian Express

கிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை?  அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.இனியாவது புறக்கணிப்போம்; இந்துக்களுக்கு எதிரான தமிழ் திரைப்படங்களை.  நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் திரைமோகத்தால். பொழுதுபோக்கிற்கும் அழிவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா?  தங்களது மனதில் எழும் கேள்விகளுக்கு இப்பதிவின் முடிவில் விடை கிடைத்துவிடும்.நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு கடவுள் பக்தி கொண்ட கதாபாத்திரங்களில் நாயகர்கள் நடிக்கவில்லையே ஏன்? நாயகிகள் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார்கள்.தற்போது கூட ஒரு படம் வந்தது. ஆனால் அதிலும் இந்து விரோதம் தான், ஏன்? தமிழ்த்திரை உலகம் எச்சிந்தையின் கைப்பாவையாக மாறி இருக்கிறது. சற்று யோசித்து பாருங்கள்.கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழ்த் திரை உலகம் இந்து தர்மத்தை மறைத்து, இந்துக்கடவுளை விமர்சித்து இயங்கி வருகிறது. யாருக்காக இத்தகு சிறப்பு பணியை செய்கிறார்கள் என்று தெரிந்த பிறகும், அவர்களை வளர்த்து உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறோம் நாம். நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் தானே, திரைமோகத்தால்.அவ்வை சண்முகி ஆனாலும், அன்பே சிவம் என்றாலும், தசாவதாரம் என்றாலும், விஸ்வரூபம் ஆனாலும் தாக்கப்படுவது இந்துக்கடவுள்கள் தான். மற்றவரை ஏன் விமர்சிக்கவில்லை என்பதல்ல எங்களது கேள்வி, எங்களை ஏன் விமர்சிக்கிறாய், எங்களது மனதினை, எங்களது நம்பிக்கையை, ஏன் புண்படுத்துகிறாய் என்பதே அத் திரைப்படத்தை நோக்கி, நாங்கள் வைக்கும் கேள்வி?இந்துக்கடவுளின் அடையாளங்களோடு இருப்பவரை  கெட்ட மனிதராக  காண்பிப்பது, பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் தொடர்ந்து கொண்டே வருகிறது . நடிகர்திலகத்தினை கொண்டாடும் நடிகர்களே, அவர் நடித்த தெய்வக்கதாபாத்திரத்தை விமர்சித்து தங்களது கஜானாவை நிரப்பி கொண்டு இருக்கிறீர்களே, இது சற்றும் ஏற்புடமையா? உங்களுக்கு பணம் தான் பிரதானம். கலை அல்ல. கலைகளை கட்டிக்காத்த மனிதர்களை மறந்து விட்டீர்களே, பணத்திற்காக தானேஇத்தகு பொய் முகத்திற்கும், போலி முகத்திற்கும் தாங்கள் வைத்துக்கொள்ளும் பெயர்  பகுத்தறிவு. அட என்ன ஒரு நிலைப்பாடு. மற்றவர்கள் மனதினை புண்படுத்தும் சிந்தைக்கு பொது அறிவு இருக்கிறதா என்பதே கேள்விக்குறி தானே?பிறகு பகுத்தறிவு என்று சொல்வது நகைச்சுவையை தருகிறது.தற்போது மீண்டும் உங்களது இந்துமத எதிர்ப்பு.படத்தின் பெயர் கர்ணன், அதில் ஒரு பாடல் வெளியிட போகிறீர்கள், திரௌபதி என்று தொடங்கும் பாடல். அடுத்த வார்த்தை   அது தான் உங்களது துர்புத்தியை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.  துரோபதி அம்மன் நெருப்பில் இருந்து பிறந்தவர்.  பொசுங்கி விடுவீர்கள்! ஜாக்கிரதை.கர்ணன், ஆகா இப் பெயர் கேட்டாலே அகம் மகிழ்ந்து போகுமே! சூரியபுத்திரன் ஆயிற்றே! கொடை வள்ளலாயிற்றே! பாண்டவர்களுக்கு மூத்தவர் ஆயிற்றே! கிருஷ்ணபரமாத்மா கொண்டாடிய வீரராயிற்றே!திரௌபதி அம்மா தெய்வமாக கொண்டாடபடுகிறார்கள். அவர்கள் பெயர் வைத்து தெய்வீக பாடல் எழுத வேண்டியது தானே? ஏன் அத்தகு நோக்கம் கொண்ட பாடலை எழுதுகிறீர்கள்? ஆண்டாளை வைரமுத்து விமர்சித்தார், தற்போது மற்றொரு கீழ்த்தரமான சிந்தை முளைத்திருக்கிறது. கிள்ளி எறிந்திட  வேண்டும் உடனுக்குடன்.நீங்கள் தான் பகுத்தறிவு பகலவர்கள் ஆயிற்றே. பிறகு எதற்கு ஐயா நாங்கள் தெய்வமாக வணங்கி வருவோரின் பெயரை உபயோகபடுத்துகிறீர்கள். உங்களுக்கு பிடித்த வெளிநாட்டு நபர்களின் பெயரை வைத்து கொள்ள வேண்டியது தானே? ஆனால் படம் ஓடாது. பசுந்தோல் அணிந்த புலிகள் தானே நீங்கள். மக்கள் புரிந்து கொண்டு உங்களை ஓரங்கட்ட போகும் நாள் விரைவில் வரும்.மகாபாரதத்தை புரிந்து கொள்ள இயலாத கூட்டங்கள், முயற்சி கூட செய்ய இயலாத கூட்டங்கள், ஜாதியை ஒழிக்கிறோம், மதத்தை ஒழிக்கிறோம் என்று நல்லவர்கள் போல் நாடகமாடி இந்துக்களுக்கு எதிராக பயணிக்கிறார்கள்.இந்துக்களாகிய நாம் பொதுத்துவம் பொதுத்துவம் என்று சொல்லி தனித்துவத்தை இழந்து கொண்டே வருகிறோம். எதிர்ப்புகள்  மட்டுமே இங்கு மாற்றத்தை ஏற்படுத்தி விடாது.வெள்ளையனே வெளியேறு என்று முழக்கம் ஒலித்த காலத்தில், அவர்களது பொருளாதாரத்தை அழிக்க சுதேசி கப்பல் ஓட்டிய   சிதம்பரம் ஐயாவின் வழியை பின்பற்றுவோம்.படம் வெளிவந்தால் முதல் நாளில் பதாகை வைக்கிறோம்; பால் அபிஷேகம் செய்கிறோம்.  அதனால் பிறந்தது ஆணவச்செருக்கு அத் திரை கூட்டத்திற்கு. இந்துக் கடவுளை விமர்சிக்கும் படங்களை புறக்கணிப்போம். அவர்களது பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துவோம்.நீங்கள் எப்படி வேண்டுமானாலும் திட்டி படம் எடுங்கள், எங்களுக்கு பொழுது போக்கு தான் முக்கியம் என்று முண்டியடித்து கொண்டு முதல் ஆளாக படம் பார்க்க செல்வோமானால் இழப்பு நமக்கே.நம் கலாச்சாரத்தினைக் காப்போம். நமது அடுத்த தலைமுறைக்கு எதை விட்டு செல்ல போகிறோம்.திரை மோகத்தையா,அல்லது நமது நாகரீகம், நம்பிக்கை, கலாச்சாரம் இவற்றையா?விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.இனியாவது விழித்துக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *