திட்டங்களை சொல்லாமல் குஸ்தி எடுப்பது அழகா? ராகுலின் பிரசார ஸ்டண்ட் குறித்து குஷ்பு விமர்சனம்

அரசியல் தமிழகம்

பிரசார மேடைகளில் திட்டம் கொண்டு வருவது பற்றி பேசாமல், குஸ்தி எடுப்பது ஒரு தலைவருக்கு அழகல்ல என்று, பாஜகவை சேர்ந்த குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.

பொதுவாக அரசியல் மேடைகள் காரசாரமாக இருக்கும். தேர்தல் காலங்களில் இன்னும் சொல்லவே வேண்டாம்; பிரசார மேடைகளில் சூடுபறக்கும் பேச்சுகளும், அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்களும் இருக்கும். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, பிரசார மேடைகளை கண்கட்டி வித்தை காட்டுமிடமாக மாற்றி வருகிறார். தன்னை எளிமையான தலைவர் என்று காட்டிக் கொள்ளவதற்காக அவர் அடிக்கும் ஸ்டண்டுகளை பலரும் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.

தேர்தலுக்கு முன்பு வரை நாட்டிலேயே கூட ஒழுங்காக இல்லாமல் அவ்வப்போது வெளிநாடுகளில் சுற்றி வரும் ராகுலுக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ் நாட்டின் மீது திடீர் பாசம் பொங்கி வருகிறது. தன்னை ஏழை பங்காளனாக காட்டிக் கொள்ள, கடையில் அமர்ந்து டீ சாப்பிடுகிறார். மீனவர்களுடன் கடலில் குளித்தார்; தூத்துகுடியில் உப்பளத்தில் உப்பு சேகரித்தார்.

அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கும்மாளமிட்டார். தேர்தல் பிரசார மேடைபோலவே தெரியவில்லை. கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. அதே பள்ளியில், மாணவி ஒருவருடன் போட்டிப்போட்டு ராகுல் தண்டால் எடுத்துக்காட்டினார். ராகுல் செயல்பாடுகள் காங்கிரஸ்காரர்களுக்கே கூட சுத்தமாக பிடிக்கவில்லை.

தேர்தல் பிரசாரம் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு, இப்படியா ராகுல் காந்தி கண்கட்டி வித்தை காட்டுவது? தேர்தலுக்கு ஒருமாதமே உள்ளது என்பதை அவர் அறியவில்லையா? இப்படியா பிரசார மேடைகளில் குழந்தைத்தனமாக நடந்து கொள்வது என்று, காங்கிரஸார் பலர் புலம்பியதை கேட்க முடிந்தது.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த குஷ்புவும், ராகுல் காந்தியின் தேர்தல் பிரசார ஸ்டண்டுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடலில் குளிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரசார மேடைகளில், என்ன திட்டத்தை கொண்டு வருவோம் என மக்களிடம் ஆர் சொல்ல வேண்டும் என்ற குஷ்பு, நிதி ஆண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் எரிபொருள் உயர்வது இயல்பு என்றும் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *