“ஜெய் கிசான்” என்று லால்பகதூர் சாஸ்திரி கோஷம் இட்டது உண்மையான விவசாயிகளை குறித்துதான்; தேசதுரோகிகளை அல்ல – மஹிமா சாஸ்திரி…

அரசியல் இந்தியா

“ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!” என்ற கோஷத்தை நமக்கு அளித்தது முன்னாள் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.  எளிமையின் மறுபெயர் தான் லால் பகதூர் சாஸ்திரி. 

குடியரசு தினம் அன்று தில்லியில் விவசாயிகள் என்ற போர்வையில் தீவிரவாத கும்பல் காவல்துறை மீது தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டது.  காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளரான பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் முதலில் டிராக்டரை தாறுமாறாக ஓட்டி கீழே விழுந்து இறந்தவரை போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தவர் என்று பொய்யான வதந்தியை பரப்பினார்.  பொய் வதந்தி காரணமாக கலவரத்தின் தாக்கம் அதிகரித்தது.  சிறிது நேரத்தில் அந்தப் பொய்யான ட்விட்டர் பதிவை ராஜ்தீப் சர்தேசாய் டெலிட் செய்துவிட்டார்.  ஆனால் அதற்குள் வதந்தி காட்டுத் தீ போல பரவி விட்டது.கலவரக்காரர்கள் போலீசை தாக்கும் காட்சிகளை இந்தபத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் பதிவிடவில்லை. கலவரக்காரர்கள் இந்திய தேசிய கொடியை தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு கொடியை செங்கோட்டையில் பறக்கவிடும் காட்சியையும் இவர் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை.  ஆனால் போலீஸ்காரர்கள் கலவரக்காரர்களை துரத்தும் காட்சியை இவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அந்தக் காட்சிக்கு தலைப்பாக “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற கோஷம் ஒலிக்கும் இந்த நாட்டில், குடியரசு தினம் அன்று ஜவான்களுக்கு  (ராணுவ வீரர்களுக்கு) எதிராக கிசான் (விவசாயிகள்) போராடுகிறார்கள்.  இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்” என்று ராஜ்தீப் சர்தேசாய் பதிவிட்டுள்ளார்.

தேச விரோத கருத்துக்களுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராஜ்தீப் சர்தேசாயின் இந்த ட்விட்டர் பதிவுக்கு, லால்பகதூர் சாஸ்திரியின் பேத்தி மஹிமா சாஸ்திரி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.  “எனது தாத்தா ஆதரித்தது உண்மையான விவசாயிகளை மட்டும்தான். காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒருநாளும் எனது தாத்தா லால் பகதூர் சாஸ்திரி ஆதரிக்க மாட்டார்” என்கிறார் மஹிமா சாஸ்திரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *