மனிதனின் கஷ்டங்களை ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!

ஆன்மீகம்

டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.

மனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமே!மேம்பட்ட நிலையில்  உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.
கடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.

அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன. ‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.ஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

ஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.
மகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.
உலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக க்ருஷ்ண பரமாத்மா,புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.

உலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.

மகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது சிவாய நம மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *