இந்தியர்களாக ஒன்றிணைவோம்” என்கிறார் கிரிக்கெட் உலகின் கடவுள்

அரசியல் இந்தியா உலகம் விளையாட்டு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் கீழ் பொருளாதார ரீதியாக இந்தியா வலுவடைந்து வருவதை பொறுக்காத தேச விரோத சக்திகள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இடதுசாரிகள், மாவோ தீவிரவாதிகள், ஜிஹாதி தீவிரவாதிகள் மற்றும் காங்கிரஸ், திமுக போன்ற குறுகிய நோக்கம் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.எதிர்க்கட்சிகள்; ஆளும் கட்சிக்கு எதிராக போராடுவது என்பது அன்றாடம் நடக்கும் விவகாரம்தான். ஆனால் அயல்நாட்டிலிருந்து இந்திய தேசத்திற்கு எதிராக குரல் கொடுக்க செய்வது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.தில்லி பகுதியில் விவசாயிகள் என்ற போர்வையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து குடியரசு தினம் அன்று செய்த செயல்களை கண்டு நாடே கொதித்து எழுந்தது. இப்போது, இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, அந்த தீவிரவாத கும்பலுக்கு ஆதரவாக உலகத்தில் உள்ள பல பிரபலங்கள் குரல் கொடுக்கிறார்கள்.விவசாயத்திற்கு சம்பந்தமே இல்லாத பாப் பாடகி ரிஹானா Rihanna, சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் க்ரீடா துன்பர்க் Greta Thunberg, வீடியோ புகழ் மியா காலிஃபா porn star Mia Khalifa உள்ளிட்ட பல பிரபலங்கள் தலைநகர் தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு டுவிட் செய்துள்ளார்.

Image result for sachin tweet farmers

இந்தியாவின் இறையாண்மையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அயல்நாட்டு சக்திகள் பார்வையாளராக இருக்கலாம் இந்தியாவின் உள்ளே மூக்கை நுழைக்க முடியாது. இந்தியாவின் கொள்கை முடிவுகளை இந்தியாவே எடுக்கும். இந்தியர்களாக ஒன்றிணைவோம்” என்கிறார் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.சபாஷ் சச்சின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *