மதுரை எய்ம்ஸ் பணியில் ஈடுபட்ட மின்சார ஊழியர் மீது மின்சாரம் தாக்கியது.! 40 அடி மின் கம்பம் உயரத்தில் நடத்த பரபரப்பு சம்பவம்.!

டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் “எய்ம்ஸ்” மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து, இதற்காக ரூ.1264 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்தது.

இதில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 201.75 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு 750 படுக்கைகள், 16 ஆபரேசன் தியேட்டர்கள், 18 ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரங்குகள் இந்த மருத்துவமனையில் அமைய உள்ளன. மேலும் 100 மாணவ- மாணவிகள் படிக்கும் மருத்துவக்கல்லூரி, 60 பேர் பயிலும் நர்சிங் கல்லூரி ஆகியவையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட உள்ளது.

தற்போது அங்கே கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மருத்துவமனையின் சுற்றுச் சுவர் அமைக்கும் பனி 90 சதவிகிதம் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நான்கு வழிச் சாலையுடன் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இது போக சாலையின் ஓரத்தில் இருக்கும் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பனி நடந்து வருகிறது.

அப்பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கூத்தியார்குண்டு சந்திப்பில் இணையும் ஏய்ம்ஸ் மருத்துவமனையின் சாலையின் அருகே இருந்த 40 அடி உயர மின் கம்பத்தின் மேலே அமர்ந்து கொண்டு மின் ஊழியர் கதிரேசன் பணி செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அந்தரத்தில் தலைகீழாக தொங்கினார் மின்சார ஊழியர் கதிரேசன். உடனே கீழே இருந்த சக மின் ஊழியர்கள், மின்கம்பத்தின் மீது ஏறி மின்சாரம் தாக்கிய மின் ஊழியரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர்.

இதில் சம்பவத்தில் அந்த ஊழியர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அவருக்கு முதல் உதவி வழங்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மின்சாரம் தாக்கிய 27 வயது மதிக்கத்தக்க மின் ஊழியர் கதிரேசன், உசிலப்பட்டியை சேர்ந்தவர் என்றும், இவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மின்சார ஊழியர்களை பாதுகாப்பாக மிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்திச் சென்றனர்.

கனிமொழி சிபாரிசில் இந்தி படிக்கும் திமுக நிர்வாகிகளின் குழந்தைகள்.! வெளியானது கனிமொழியின் கடிதம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *