மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: தமிழக வீரர் பாலுசாமி வீரமரணம்

தமிழகம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், மதுரையைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் பாலுசாமி வீரமரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகரித்த வண்ணம் இருந்தது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பதவியேற்ற பிறகு, மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுங்கியது. அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டதால் ஆத்திரத்தில் உள்ள மாவோயிஸ்டுகள், அவ்வப்போது வன்முறையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில், மதுரையை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் பாலுசாமி என்பவர் வீரமரணம் அடைந்தார். இவர் மதுரை, பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த லட்சுமணனின் மகன் ஆவார். கடந்த 14 ஆண்டுகளாக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த பாலுச்சாமிக்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தற்போது அழகர்கோவில் பகுதியில் அவரத் குடும்பம் வசித்து வருகிறது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாலுசாமி வீர மரணமடைந்த தகவல் கேட்டு அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது. கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்த பாலுசாமி, கடந்த வாரம் தான் பணிக்கு திரும்பினார். மதுரை வீரர் பாலுச்சாமியின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *