மகா சிக்கலில் இலங்கையின் மஹா சங்கம்

இந்தியா உலகம்

பைடனெல்லாம் வேண்டவே வேண்டாம், மோடியே போதும் என்று கதறும் மஹாசங்க உறுப்பினர்கள். இதனை மௌனமாக ஆதரிக்கும் சீனா தான் இதில் ஹைலைட். ஆக மொத்தத்தில் வித்தியாசமான காக்டெய்ல் அரசியல் இலங்கையை ஆட்டிப்படைக்கிறது. இந்த இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிப்பது இலங்கை அரசு பிரதிநிதிகளும், நிர்வாகத்தினர் தான். அப்படி என்ன தான் நடக்கிறது இலங்கையில்? மஹா சங்கம் என்பது இலங்கையில் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் நிர்வகிக்கும் அமைப்பு. இந்த அமைப்பினை சிங்களவர்கள் நடத்தி வருகிறார்கள் அங்கு. இவர்களே தற்போது உள்ள #ராஜபக்ஷ சகோதரர்களை ஆட்சியில் அமர்த்த பிரம்ம பிரயத்தனங்களை எல்லாம் செய்தவர்கள். தற்சமயம் இவர்கள் தான் கச்சைக்கட்டிக்கொண்டு ஆட்சியாளர்களை சகட்டுமேனிக்கு வறுத்து எடுத்து கொண்டு இருக்கிறார்கள். விஷயம் இது தான்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியதில் இருந்தே இலங்கையில் உள்ள மிஷனரிகள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் கொஞ்சம் பெரிய தலைகள், ஜோபைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்க பல விதங்களிலும் பல்வேறு விதமான முயற்சிகளை அங்கு அமெரிக்காவில் முன்னெடுத்தவர்கள். பழமைவாதிகள். இவர்களின் தற்போதைய இலக்கு இலங்கை மக்கள். கிட்டத்தட்ட பெரும்பாண்மையான மக்களை கிருஸ்துவ மதத்திற்குள் கொண்டு வர பலவாறாக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் அங்கு. யாராவது ஏதேனும் அரசாங்க அடிப்படையில் முரண்டு பிடித்தால் பொருளாதார தடை கொண்டு வருவோம், தொழில் வர்த்தக வளர்ச்சியை தடுப்போம் என்றெல்லாம் நுட்பமாக அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறார்கள் தற்போதைக்கு. ஏற்கனவே குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டுள்ள இலங்கையை இது ஆழமாக பதம் பார்க்கிறது.

அரசு நிர்வாகம் வாயிலாக ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலை. இதில் கொதிப்படைந்துள்ளது இந்த மஹாசங்கம் தான். காரணம் இப்படியான மதமாற்ற நடவடிக்கைகளால் பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர் தான் அதிகமாக மதம் மாறி வருகிறார்கள். இதில் மிஷனரிகள் மிக நுணுக்கமாக இயங்குகிறார்கள். எவ்விதமெனில் இப்படி மதமாறும் சிங்களவர்களுக்கு நிலங்களை அதாவது தமிழர்கள் வசம் இருந்த காணி நிலங்களை கிரையம் செய்து கொடுக்கிறார்கள். இது எப்படி இவர்களுக்கு சாத்தியப் படுகிறது என்பதை ஆராய்ந்தால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இவர்கள் வசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்த காலத்தில் தமிழர்கள் வசித்த பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் வைத்து மருத்துவ உதவிகளை செய்து வந்ததாக உலகம் கவனித்து இருக்கிறது. அவர்களின் கவனத்திற்கு வராமல் வேறோர் காரியத்தை செய்து இருக்கிறார்கள் இவர்கள். இறந்தவர்களை குறித்தும் படுகாயங்களுடன் தப்பியவர்கள் குறித்தும் வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களின் உறவினர்கள் குறித்து எல்லாம் விரிவான தகவல்களை சேகரித்து வைத்து கொண்டு இருக்கிறார்கள்.

இது எதற்கு என்று ஆராய்ந்தால்; அவர்களுக்கு எந்தெந்த இடங்களில் எந்த மாதிரியான நிலங்கள் எல்லாம் இருக்கிறது என்பதை வெளி உலகுக்கு தெரியாமல் தகவலாக சேகரித்து வைத்து இருக்கிறார்கள். இப்போது அந்த இடங்கள் அடையாளம் கண்டு பிடித்து அதனை இந்த மதம் மாறும் சிங்களவர்களுக்கு கொடுக்கிறார்கள். இந்த வகையில் இவர்களின் வசம் சுமார் 35,000 ஏக்கர் நிலங்களை குறித்து பதிவேட்டு தகவல்கள் இருக்கலாம் என்கின்றனர். கூடவே வெளிநாட்டு வாழ் இலங்கை மக்களின் நிலங்களை நம்மூர் ஹவாலா போல் இடம் மாற்றி தருகிறார்கள். அதாவது இலங்கையில் உள்ள அவர்களின் சொந்த பதிவு கொண்டு இடத்திற்கு பதிலாக அவர்கள் தற்சமயம் இருக்கும் தேசத்தில் இடம் பெற்று கொடுக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்து வந்த அரசாங்கம் தற்சமயம் பொறியில் சிக்கிய எலி போல் ஒன்றும் செய்ய முடியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். ஏன் மிஷனரிகள் தேடித் தேடி போய் சிங்களவர்களை மதம் மாற்றுகிறார்கள் என்று பார்த்தால், அரசுக்கு இது குறித்து தெரியவந்தாலும் கேள்வி கேட்க முடியாது. காரணம் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை காலமும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. காணாமல் போனவர்களின் பட்டியலில் வைத்து இருக்கிறது. தற்சமயம் கேள்வி கேட்டால் அது இறந்து போனவர்களை குறித்து ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும். ஆக இலங்கை போர் குற்றவாளி என்பதை அவர்களே ஒப்புக் கொண்டதாக ஆகும். இரண்டாவது இறந்த போனவர்களை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டால் அவர்களின் பலருக்கும் இன்ஷூரன்ஸ் பணம் கொடுக்க வேண்டி வரும். அதனாலும் பேசாமல் இருக்கிறார்கள்.

இதனை தான் ஆரம்பத்தில் இலங்கைக்கு எடுத்து சொன்னது இந்தியா தனது பிரதிநிதிகள் வழியாக, … முதலில் ஒப்புக் கொண்டு பிறகு பிரண்ட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா சொல்வதை எல்லாம் கேட்டு கொண்டு இருக்க முடியாது, உங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள் என்றனர் ராஜபக்ச சகோதரர்கள். அப்போதே இது குறித்து எச்சரிக்கை செய்தது மஹாசங்கம். இந்தியா இவ்வளவு தூரம் சொல்கிறது என்றால் ஏதோ காரணங்கள் இருக்கும். அவசரப்பட வேண்டாம் என்றது. அவர்களிடமும் சீறியது சீனா இருக்கும் தைரியத்தில். அந்த சமயத்தில் தான் இந்திய பிரதமரின் சென்னை வருகையை ஒட்டிய நிகழ்வுகளை இங்குள்ள ஊடகங்களில் வந்த தகவல்களை இலங்கையில் இவர்கள் கேலி செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து தான் பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை செய்தது இலங்கையை. மிச்சமாக இனி பேசினால் ராணுவம் அங்கு தரை இறங்குவதற்கு யாரிடமும் அனுமதி கேட்டு கொண்டு இருக்காது என்றனர். இதில் தான் கொஞ்சம் அடங்கியது இலங்கை.

அப்போதே ஒன்று சொன்னது இந்தியா. தான் வாக்கிளிப்பில் கலந்து கொள்ள போவதில்லை, என்றாலும் நீங்கள் கூண்டில் நிற்பது உறுதி. ஆனால் விஷயம் அத்தோடு முடிந்து விடாது வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள் என்றனர் நம் இந்திய தரப்பில். வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் தான் இலங்கையை ஆட்டிப்பார்த்து விட்டது. தன் தவற்றை உணர்ந்து அமைதி காத்தது. இப்போது அங்கு நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது தான் அது உணர்கிறது இந்தியா சொன்ன உண்மையை. இந்த விஷயத்தில் சீனா கூட அதற்கு உதவி செய்ய முடியாது. அப்படி ஓர் கட்டமைப்பில் அமெரிக்காவின் ஆசிப் பெற்ற மிஷனரிகள் வேகவேகமாக காய் நகர்த்தி வருகின்றனர். அதனால் தான் இந்த திக்பிரமை பிடித்த நிலையில் இலங்கை இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *