நாடு முழுவதும் முக்கிய மாற்றம். கொண்டாட தயாராகும் மக்கள்

அரசியல் இந்தியா தமிழகம்

யாரும் எதிர்பார்க்காத முக்கிய மாற்றங்களை மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செய்ய தொடங்கியுள்ளது. இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளை தொடங்கியது. இந்தியாவில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியாது என பலர் நினைத்து கொண்டிருக்க, சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதோடு மட்டுமல்லாமல் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து விட்டது.

Seattle based Indian community counters local politicians on anti-CAA  resolutions - The Economic Times

இது ஒருபுறம் இருக்க CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியும் காட்டியது, இவை பலருக்கும் தெரிந்தது. ஆனால் கடந்து இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடியின் மேற்பார்வையில் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ஒரு ரகசிய திட்டம் தீட்டப்பட்டு அதனை தற்போது செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

ஆம் இந்தியாவில் மத மாற்றம் ஏன் நடைபெறுகிறது என மத்திய பாஜக அரசு கணக்கு எடுத்தது. ஒன்று வெளிநாட்டில் இருந்து வரும் நிதி மூலம் ஒரு தொழிலாக மத மாற்றம் செய்ய ஒரு குழு இருப்பது கண்டறியபட்டது. மற்றொன்று இந்து மதத்தில் திருமணம் உள்ளிட்ட செலவுகளால் ஏழை பெண்கள் பல ஆண்டுகள் திருமணம் நடைபெறாமல் பின்பு அதே சாதியை சேர்ந்த நபர்கள் கிடைத்தால் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் திருமணம் செய்து மதமும் மாறுகின்றன.

உதாரணத்திற்கு சொல்லப்போனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் இந்துக்கள், நாடார் கிறிஸ்தவர்கள் என இரண்டு பிரிவுகள் ஒரே சாதியாக இருந்தாலும் தனி கலாச்சாரங்களை கடை பிடிக்கின்றனர், பல இந்து பெண்களை வரதட்சணை தேவையில்லை நாம் ஒரே சமூகம் தானே என கூறி கிறிஸ்தவ நாடார் ஆண்கள் திருமணம் செய்வது தொடர் கதையாக நடந்து வரும் சம்பவம்.

இதன் பின்னணியில் திருமணம் மூலம் அந்த பெண்ணின் கலாச்சாரமும் மதமும் மாறுகிறது இதே போல் நாட்டில் பல இடங்களில் மத மாற்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சகம் மூலம் இந்தியாவில் கோவில் வருமானம், மற்றும் அதற்கான செயல்பாடுகள் குறித்து கணக்கு எடுக்க உத்தரவிட்டு இருக்கிறார் பிரதமர்.

அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் கோவில்கள் மூலம் அதிக வருமானம் வருவதும், இவை தவிர்த்து 10 வட இந்திய மாநிலங்களிலும் சுட்டி காட்டபட்டுள்ளன. ஆனால் கோவில் வருமானத்தை இந்துக்களுக்கு பயன்படுத்துவது மிகவும் குறைவு எனவும் அறிக்கை சென்றுள்ளது.

இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு குழு பிரதமரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் வெளிநாட்டில் இருந்து வரும் NGO நிதியை பெற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மத மாற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளன. இந்த சூழலில் கோவில் பணத்தை அந்தந்த மாநிலங்களில் இந்து ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் என திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கோவிலும் இந்து மதத்தை பரப்பும் இடமாக மாற வேண்டும். உதாரணத்திற்கு மதம் மாறியவர்களை தாய் மதம் திருப்பும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சன்மானம் வழங்க படவேண்டும். கோவில்களிலே வரம் பார்க்கும் மையங்களை கணினி வழியில் அமைக்க வேண்டும்.

கோவில்களுக்கு வரும் நிதியை மாநில அரசுகள் 30% மட்டுமே எடுத்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும், மீதி தொகையை இந்துகளுக்கு இலவச திருமணங்கள், தாய்மதம் திருப்புதல், புதிய கோவில்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 33-40 ஆண்டுகளில் இந்தியாவில் மதமாற்றம் குறைந்து முழுவதும் இந்துக்கள் 89-93% உள்ள நாடாக இந்தியா மாறும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து முதலில் ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானம் செயல்முறை விளக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியே அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் நேரடியாக தொலைபேசியிலும், டெல்லிக்கு அழைத்தும் பேசியுள்ளார். தொடக்கத்தில் இது குறித்து முடிவு எடுக்க காலம் தாழ்த்தினார் ரெட்டி, ஆனால் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக உண்டான இந்துக்கள் எதிர்ப்பு அலை மற்றும் இந்துக்களை அழிக்க பார்க்கிறார் ஜெகன் என எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தியது ஆகிய காரணங்கள் ரெட்டிக்கு பின்னடைவை கொடுத்தது.

இதை சமாளிக்க மத்திய அரசின் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிவிட்டார். இதையடுத்து நாடு முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில்கள் அமைக்கப்படும் எனவும், அந்த கோவில்கள் மூலம் சீர்வரிசை பொருள்களுடன் இலவச திருமணம் நடைபெறும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விரைவில் தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த திட்டம் தொடங்கப்படும் எனவும், தற்போது பிரம்மாண்டமாக அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது இந்த திட்டம் குறித்து வெளிப்படையான அறிவிப்பு வெளியாகும் எனவும் பிரதமர் மோடி இதனை அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதில் இந்து மடாலயங்கள், ஆன்மீக குருக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரையும் ஈடுபடுத்தி முழு அளவில் செயல்பட ஒரு முடிவு எடுத்துவிட்டாராம் பிரதமர் மோடி. மதமாற்றத்தை முறியடிக்க நாமும் அதே வழியை பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது மத்திய அரசு.

இவை தவிர்த்து இலங்கை, நேபாளம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் மூலம் அந்தந்த நாடுகளில் கோவில் கட்டவும், அதன் மூலம் இந்து மதத்தை பரப்பவும் திட்டங்கள் தயாராகி வருகிறதாம். ஏற்கனவே அரபு நாடுகளில் கூட இந்து கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *