உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தாமல்,குடியுரிமை சட்டத்தில் திமுக கவனம் செலுத்துவது ஏன்? திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது!

2016ம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றம் தடையின் காரணமாக கடந்த மூன்று வருடமாக காலியாகி உள்ளது, 2016ம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்தது திமுக தாக்கல் செய்த வழக்கு தான் முக்கிய காரணம். ஆனால் திமுக தொடர்ந்து அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுவதாக குற்றம் சுமர்த்தி வந்தது.

தற்போது மூன்று வருடமாக காலியாக உள்ள உள்ளாட்சிகளுக்கு தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். ஆனால் மீண்டும் திமுக சார்பில் நீதி மன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடுத்தது, இதனை தொடர்ந்து தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டத்தை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கையில், திமுக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளது, இதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயங்குவதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்,மேலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாடு முழுவது போராட்டம் தீயாக பரவினால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை நிறுத்த திமுக திட்டமிடுவதாக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது,

ஆனால் திமுக அறிவித்த போராட்டம், ஆரம்பம் முதல் போதிய வரவேற்பு இல்லை, மேலும் திமுக நடத்தும் போராட்டத்துக்கு அணைத்து கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அதை மக்கள் நீதி மய்யம் உட்பட பல காட்சிகள் நிராகரித்துள்ளது,மேலும் தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலின் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால், உள்ளாட்சி தேர்தல் எந்த தடையுமின்றி நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

முக.ஸ்டாலின் அழைப்பை நிராகரித்த கமலஹாசன்! நடிகர் சங்கத்திடம் பல்பு வாங்கிய திமுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *