சேலத்தில் மோடி இட்லி உணவகம் 4 இட்லி வெறும் 10 ரூபாய் …

4 இட்லி + சுவையான சாம்பார் வெறும் பத்து ரூபாயில் சேலம் மோடி இட்லி உணவகங்களில் மட்டுமே கிடைக்கும்.
“சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், முதல் தரமான அரிசி மற்றும் பருப்பு உபயோகித்து பிரம்மாண்டமான மெஷின்கள் மூலம் தரமாக தயாராகிறது மோடி இட்லி.  உணவு தயாரிப்பதற்கான அனைத்து லைசென்ஸ்களையும் பெற்றுவிட்டோம்” என்கிறார் மோடி உணவகத்தின் உரிமையாளர் மகேஷ்.
Savour 'Modi idlis' priced at Rs 10 for 4 pieces in Salem | Food News –  India TV
திரு மகேஷ் ஒரு உண்மையான சமூக ஆர்வலர். சேலம்வாசிகளுக்கு,  குறிப்பாக ஏழைகளுக்கு நன்கு அறிமுகமானவர் மகேஷ்.  சீன வைரஸ் (கொரோனா) பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போது, தினசரி ஏழாயிரத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு, இலவசமாக உணவளித்து உயிர்காத்தவர் மகேஷ்.
ஒரு லட்சம் ஏழைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைத்து, அனைவருக்கும் வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு கிடைக்கச் செய்தவர் மகேஷ்.
ஏழை மக்களின் கோரிக்கையை ஏற்று, பல லட்சம் ரூபாய் முதலீட்டில் மோடி இட்லி உணவகங்கள் வெற்றிகரமாக துவக்கப்பட்டன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *