நலிந்தவர்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா!பிறந்தநாளில் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

அரசியல் தமிழகம்

நலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்காக ஜெயலலிதா பாடுபட்டவர் என்று, அவரது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களமிறங்க உள்ள நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடனான நினைவலைகளை பகிர்ந்த்து, பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளதுள்ளார்.

இது குறித்த பதிவில் பிரதமர் மோடி கூறுகையில், “ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவர், மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களின் அதிகாரத்தை முன்னேற்றுவதற்காக பாடுபட்டு வந்தார்; அதற்காக பரவலாக போற்றப்படுகிறார்.

நமது சக்தியையும் மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை அவர் செய்திருக்கிறார். அவருடனான பல்வேறு தருணங்களை எப்போதும் போற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், குஜராத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததற்கும், டிவிட் பதிவின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி அரசியல் மற்றும் நல்லாட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை, தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “குஜராத் தேர்தல் வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுபோன்ற ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்ய இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு மாநிலத்தில் பணியாற்றி வரும் ஒரு கட்சிக்கு இது குறிப்பிடத்தக்கது.

குஜராத் பாஜகவின் ஒவ்வொரு காரியகார்த்தாவின் முயற்சிகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன். குஜராத் அரசின் மக்கள் சார்ந்த கொள்கைகள் முழு மாநிலத்தையும் சாதகமாக மாற்றியுள்ளன. நன்றி, குஜராத்!” என்று, பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *