தரம் தாழ்ந்த கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு தேசிய ஊடகவியலாளர் நல சங்கத்தின் சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .பாரதப் பிரதமர் மோடியை கீழ்த்தரமாக கேலிச் சித்திரத்தின் மூலம் ஆனந்த விகடன் விமர்சித்துள்ளது..

எஸ் எஸ் வாசன் காலத்தில் தேசபக்தியை ஊட்டி வளர்த்த ஆனந்த விகடன் இன்று தேசவிரோத கும்பலின் கூடாரமாக மாறி விட்டதா என்று அச்சம் தோன்றுகிறது. விமர்சனம் என்பது பொதுவான விஷயம் அதில் நாகரீகம் கடைபிடிக்க வேண்டியது பத்திரிகை தர்மம்.அந்தப் பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுவது பத்திரிக்கை தர்மம் அல்ல. ஆகையால் ஆனந்த விகடன் தன் தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்