புதிய இந்தியா- விவசாய சீர் திருத்தங்கள்

(REFORMS FOR NEW INDIA FARMERS)

2020 செப்டம்பரில் நரேந்திர மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட விவசாய சந்தை சீர்திருத்தங்கள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் உச்சக் கட்டமாகும்.

கொள்கையின் நோக்கம்:

– விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவது.

மூன்று மசோதாக்கள்:

  1. விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்), 2020 – The Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) , 2020
  2. விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு), 2020 – The Farmers Empowerment and Protection Agreement on Price Assurance and Farm services, 2020
  3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம், 2020 (Essential Commodities Amendment), 2020

ஆகிய மூன்று மசோதாக்கள் சீர்திருத்த தொகுப்பாக கொண்டு வரப்பட்டன.

விவசாய சந்தைகளின் மோசமான கட்டமைப்பை சீர்குலைத்து, விவசாயிகள் தனது தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சிறந்த விலையை அனுமதிக்க வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி, 2014 ஆம் ஆண்டு, தரப்பட்ட தேர்தல்  வாக்குறுதிப்படி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

India's Promising New Agricultural Policy

இடைத் தரகர்களை நீக்குதல்: (ELIMINATING MIDDLE MEN)

விவசாயிகளின் உற்பத்தி வருமானத்தில் பெரும் பகுதியை இரட்டிப்பாக்க, இடைத்தரகர்கள் அகற்றுவது, மற்றும் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது,  2020 ஆம் ஆண்டின் விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) , 2020 – The Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation), 2020 மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

விவசாயிகளுக்கு சிறந்த விலையை கோரக்கூடிய இடங்களில், தங்கள் விளை பொருட்களை விற்க, சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது.  அவர்கள் தங்கள் விளை பொருட்களை பண்ணையில், தொழிற்சாலை வளாகங்கள், கிடங்குகள் அல்லது குளிர்ந்த கிடங்களில் சேமிக்கலாம்.

இதன் விளைவாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆன்லைனில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது.  விவசாயிகள், அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மின்னணு வர்த்தக தளங்களை அமைப்பதற்கும் இது உதவுகிறது.

மோடி அரசு  2016 ல், வேளாண் விளை பொருட்களின், மின்னணு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக அமைத்த, “வேளாண் மின்னணு தேசிய சந்தை” (eNAM) தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே 1000 க்கும் மேற்பட்ட மண்டிகள் இருப்பதால், இந்த தளம், தேசிய சந்தையாக உருவாகி உள்ளது.

எங்கும் விற்கலாம்: (FREE TO SELL ANYWHERE)

சமீபத்திய சட்டம், விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை மாநிலத்திற்கு வெளியே கூட, விற்க அனுமதிக்கிறது.  இந்தச் சட்டத்தால், அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட மண்டி அல்லது சந்தைகளில் விற்பனைக்கு பொருந்தக் கூடிய மிகைப் படுத்தப்பட்ட சந்தைக் கட்டணங்கள், செஸ் அல்லது வரிகளை செலுத்தத் தேவையில்லை.

உள்ளூரில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் கடுமைகளிலிருந்து விடுவிக்கிறது. பெரிய கமிஷன் முகவர்களையும், அவற்றை கையாளுபவர்களையும், அடக்குகிறது.

இடைத்தரகர்கள், வாங்குபவர்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு காரணமாக, விவசாயிகள், இது வரை துன்ப விற்பனையை மேற் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போது  தங்கள் விவசாய பொருட்களை விற்க மாற்று போட்டி வழிகளுக்கு செல்லலாம்.

மிக முக்கியமாக, இந்த மசோதாவில், எங்கும் மண்டிகளை மூடுவதற்கோ அல்லது பல்வேறு தானியங்கள் மற்றும் பண்ணை பொருட்களுக்கு, அவ்வப் போது அறிவிக்கப்பட்ட, குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) முடிவுக்கு கொண்டு வருவதற்கோ அனுமதி அளிக்கப்பட ​​இல்லை.  பல மாநிலங்களில், MSP யை விட அதிக விகிதத்தில் விவசாய விளை பொருட்களை வழக்கமாக கொள் முதல் செய்யும் முறை, சமீபத்திய செயலால் தொந்தரவு செய்யப் படவில்லை.

சில அமைப்புகள் மற்றும் குழுக்களால் வெளிப்படையான நோக்கத்துடன் பிரச்சாரம் செய்யப்படும், கட்டுக்கதை, விவசாயிகளின் சமூகம் முழுவதும் பரவி வரும் அமைதியின்மையை அம்பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, பஞ்சாப் உள்ளிட்ட ஓரிரு வடமாநிலங்களில் ‘ஆர்தியாக்கள்’அல்லது இடைத்தரகர்கள் செய்யப்படும் தவறான பிரச்சாரம் முறியடிக்கப் பட வேண்டும்.

 

தீவிர மாற்றம்: (RADICAL SHIFT)

இரண்டாவது பெரிய சீர்திருத்த நடவடிக்கை, விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) , 2020 – The Farmers Empowerment and Protection Agreement on Price Assurance and Farm services, 2020.

விவசாயிகள் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே அல்லது பண்ணை விளைபொருட்களை வளர்ப்பதற்கு முன்பே, வாங்குபவர்களுடன் சுதந்திரமாக உடன்படிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.  இந்த ஒப்பந்தங்களில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, வாங்குபவர்களுக்கு விற்கும் விலைகளும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன, இதனால், கிராமப்புற மக்களுக்கு, எதுவும் கவலை இல்லை.  மேலும், விவசாயிகளுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையில் சச்சரவுகள் ஏற்பட்டால், மாவட்ட நீதிமன்ற தலைமையிலான, தீர்க்கும் முறையும் விவசாயிகள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகளுடன் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.  விற்பனைக்கு எதிராக விவசாயிகளுக்கு பணம் செலுத்துவது கூட நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் செய்யப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்த சட்டம், 2020 (Essential Commodities Amendment), 2020 – போர், பஞ்சம், அசாதாரண விலை உயர்வு மற்றும் வெள்ளம் அல்லது சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகள் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில், வரம்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசை அனுமதிக்கிறது.

வேளாண்மை மாநிலப் பட்டியலின் கீழ் இருப்பதோடு, அதை பட்டியலுக்குள் கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும். அதன் பிறகு, மாநில சட்டமன்றக் கூட்டங்கள், ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் விளைவாக, இந்த சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டன.

தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், விவசாயத் துறை செயல்படும் விதத்திலும், அரசாங்க நிறுவனங்களின் தலையீடு இல்லாமல், விவசாயிகள் சம்பாதிக்க மாற்றங்களைக் கொண்டு வருவதையே, நோக்கமாகக் கொண்டு, சட்டம் இயற்றப் பட்டன.

கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்: (MYTHS AND FACTS)

இந்த சீர்திருத்தங்களைப் பற்றிய சில கட்டுக்கதைகளை வெளிப்படையாகக் கோடிட்டு காட்ட வேண்டும்.

முதல் பெரிய கட்டுக்கதை என்னவென்றால், பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை நீக்கி விட்டார், மேலும் சந்தைகளையும், விவசாயிகளையும், தனியார் தொழிலதிபர்களின் தயவுக்கு விட்டுச் செல்லும் அனைத்து மண்டலங்களையும் மூடி விடுவார்.

உதாரணமாக, நெல், கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை, கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.  M.S. ஸ்வாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளுடன் ஒத்திசைந்து 1.5 மடங்கு அதிகரித்தது.

நெல்லில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) யை 2.4 மடங்கு உயர்த்தியது. நெல் விவசாயிகளுக்கு ரூ .4.95 லட்சம் கோடியாக இருந்தது, இது, முந்தைய ஐந்தாண்டு காலத்தில் ரூ. 2.06 லட்சம் கோடியாக இருந்தது.

பருப்பு வகைகளில், குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP), 75 மடங்கு அதிக படுத்தப் பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 49,000 கோடி ரூபாய் செலுத்தப் பட்டது. 2009-14 ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது, வெறும், 645 கோடி ரூபாய் மட்டுமே.

கோதுமையில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.77 மடங்கு அதிகரித்து, ரூ .2.97 லட்சம் கோடியாக வழங்கப் பட்டது. 2009-14ல் ரூ .1.68 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது.

எண்ணெய் பொறுத்த வரை, குறைந்தபட்ச ஆதரவு விலை, கடந்த ஐந்து ஆண்டுகளில், பத்து மடங்கு அதிகரித்து, ரூ .25,000 கோடியாக வழங்கப் பட்டது. 2009-14ல் வழங்கப் பட்டது, ரூ .2460 கோடியாக மட்டுமே இருந்தது.

குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான அரசாங்க கொள்முதல் கூட நிறுத்தப் படவில்லை அல்லது குறைக்கப் படவில்லை.  2020 ஆம் ஆண்டு, ரபி பருவத்தில், 382 லட்சம் டன் மதிப்புள்ள உணவு தானியங்களை, அரசு நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்துள்ளன, இது  சாதனையாகும்.

மற்றொரு பெரிய கட்டுக் கதை, தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் விவசாயிகள் சிக்கிக் கொள்வது தொடர்பானது.  விவசாயிகள் இந்த ஒப்பந்தங்களிலிருந்து, எந்த நேரத்திலும் அபராதம் இன்றி விலகலாம் என்பது ஒப்பந்தம். முன்கூட்டியே தொகையைப் பெறவில்லை என்றால்,  உண்மையில், அதிக எண்ணிக்கையிலான வாங்குபவர்களிடமிருந்து தேர்வு செய்ய முடியும் என்பதால், விவசாயிகள் வேறு வழியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பண்ணை உற்பத்தி விற்பனை ஒப்பந்தங்களின், ஒரு பகுதியாக, விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க, புதிய நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும், என்பது மற்றொரு கட்டுக்கதை.  ஆனால், விவசாயிகளின் நிலங்களை விற்பனை செய்வது, குத்தகைக்கு விடுவது அல்லது அடமானம் வைப்பதில் தனியார்கள் தடை செய்யப்பட்டு உள்ளதால், உண்மை முற்றிலும் மாறுபட்டது.  மேலும், விவசாய ஒப்பந்தம் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு கட்டுப்படுத்தப் பட்டிருந்தது மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கட்டுப்படுத்தப் பட்டது.

விவசாய சீர்திருத்தங்கள் மூலம், புதிய முதலீடுகள், நவீன உபகரணங்கள், சிறந்த விதைகள், அதிக பயிர்கள், விளைச்சலை மேம்படுத்துதல், சிறந்த தளவாடங்கள் மற்றும் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு, சந்தைகள், உண்மையில், உறுதி செய்யும்.

உண்மையை உலகறிய செய்ய வேண்டும்: (BUSTING MYTHS ON FARM BILLS)

 

1 பெரிய நிறுவனங்களுக்கு நன்மை, விவசாயிகளுக்கு இழப்பு பல மாநிலங்களில், விவசாயிகள், பெரிய நிறுவனங்களுடன் கரும்பு, பருத்தி, தேநீர், காபி போன்ற பயிர்களை வெற்றிகரமாக உற்பத்தி செய்தனர்.  இப்போது சிறு விவசாயிகள் உத்தரவாத இலாபத்துடன் தொழில் நுட்பம் மற்றும் உபகரணங்களிலிருந்து பயனடைவார்கள்

 

 
2 பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் பெயரில் விவசாயிகளை சுரண்டுவார்கள். ஒப்பந்த விவசாயிகளுக்கு நிலையான விலையை பெற உத்தரவாதம் அளிக்கும். எந்தவொரு கட்டத்திலும், எந்தவொரு அபராதமும் இல்லாமல் விவசாயி ஒப்பந்தத்திலிருந்து விலகலாம்  
3 விவசாயிகளின் நிலம் முதலாளிகளின் கைகளில் இருக்கும் விவசாயிகளின் நிலங்களை விற்பனை, குத்தகை அல்லது அடமானம் வைப்பதை மசோதா தெளிவாக தடை செய்கிறது.  ஒப்பந்தம் பயிர்களுக்காக இருக்கும், நிலத்திற்கு அல்ல.  
4 சந்தை முறை (மண்டி) முடிவடையும் சந்தை முறை (மண்டி) முன்பு போலவே தொடரும்.  
5 எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல், இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானவை. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்கும்.  விவசாயிகள் தற்போது, தங்கள் பயிர்களை யாருக்கும், எந்த இடத்திலும் விற்கலாம், மற்றும் பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து அதிக லாபம் ஈட்ட முடியும்.  
6 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) பாதுகாப்பு வலையை அகற்றுவதற்கான சதி ஆகும். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) யை பாதிக்காது. அது தொடரும்.
7 மத்திய அரசு பல்வேறு மாநில அரசுகளால் இயற்றப்பட்ட

APMC சட்டத்தை ரத்து செய்து வருகிறது. பண்ணை மசோதாக்கள், எந்த

வகையிலும் அத்து மீறாது, இது மாநிலங்களின் சட்டமாகும்

விவசாய சந்தைகளுக்கு வெளியே நடக்கும் வர்த்தகம், புதிய சட்டத்தின் கீழ் வரும் APMC களை விட மாற்று வர்த்தககள் மூலம் சிறந்த விலை கண்டுபிடிப்பை எளிதாக்குகின்றன  

 

விவசாயிகளுக்கு உறுதியான விலைகள் மூலம், நல்ல ஒப்பந்தம் வழங்கப் படுவதற்கும், விளை பொருட்களை பண்ணை வாசலில் விற்பனை செய்வதற்கும், பயிர் சேமிப்பு,  நிலைப்பாடு ஆகியவற்றின் இடையூறுகளுக்கு ஆளாகாமல் ஏன் இவ்வளவு எதிர்ப்பு இருந்தது?

சீர்திருத்த நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளால், 2014 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையிலும், பின்னர் 2019 ஆம் ஆண்டிலும் போடப்பட்டு உள்ளன.

2019 ஆம் ஆண்டின் காங்கிரஸ் அறிக்கையில் விவசாய விளை பொருள் சந்தைப்படுத்தல் குழுக்களை ரத்து செய்ய அல்லது முற்றுப்புள்ளி வைக்கவும், ஏற்றுமதி மற்றும் பண்ணை பொருட்களின் மாநிலங்களுக்கு இடையிலான இயக்கத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்கவும் அழைப்பு விடுத்திருந்தது. 2014 ஆம் ஆண்டின் காங்கிரஸ் அறிக்கையின் படி, காங்கிரஸ்  கட்சியால் ஆளப்படும் மாநிலங்களில், APMC  சட்டத்திலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களான கர்நாடகா, அசாம், இமாச்சலபிரதேசம், மேகாலயா மற்றும் ஹரியானா ஆகியவை காய்கறிகளையும், பழங்களையும் APMC வரம்பிலிருந்து வெளியே எடுத்தன.

ஆட்டத்தையே மாற்றியமைத்தல்: (GAME CHANGER)

மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விவசாய சீர்திருத்தங்கள் வேறு பட்டவை.

சீர்திருத்தங்களை எதிர்ப்பதன் மூலம், சில எதிர்க்கட்சிகளின் ‘உழவர் எதிர்ப்பு’ சந்தர்ப்பவாதம் அடையாள படுத்தப் பட்டு உள்ளது. மோடியின் தேர்தல் வெற்றிகளுக்கு மையமாக உள்ள, விவசாயிகள் சீர்திருத்தங்களைத் தடுத்து, பொருளாதார மறுசீரமைப்பை சீர்குலைத்து, கிராமப்புற இந்தியாவுக்கு செழிப்பை பரப்ப முற்படும் மத்திய அரசை, தடுக்கும் எதிர் கட்சிகள், மக்களால் நிராகரிப் படுவார்கள்.

செயலிகள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய, சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் விவசாயிகள் முடிக்கும் ஒப்பந்தங்களில், பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே இருக்கின்றன. விவசாயிகளுக்கு, நியாயமான ஒப்பந்தத்தை பெறுவது, விவசாய சீர்திருத்தங்களின் முக்கிய அம்சம். ஏனெனில் விலைகள், அளவு, வழங்கல்கள் மற்றும் காலக்கெடுவுடன் பணம் செலுத்துதல் ஆகியவை உள்ளூர் நிர்வாகங்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. பண்ணை ஒப்பந்தங்கள் நியாயமானதாக இருக்க, தொழில் நுட்பத்தை பயன் படுத்தலாம், சாத்தியமான ஓட்டைகளை நீக்கலாம் மற்றும் அனைத்து ஒப்பந்தங்களை வரை படமாக்கலாம்.

பெருந்தொகை நடவடிக்கைகள் : (GALORE MEASURES)

டிசம்பர் 25, 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது அரசாங்கத்தை நல்லாட்சி, வெளிப்படையான மற்றும் பொறுப்பு வாய்ந்த நிர்வாகத்தை வழங்குவதற்காக அர்ப்பணித்தார். இது மிகப்பெரிய தொலைநோக்கு மற்றும் மரியாதைக்குரிய அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துவதன் ஒரு பகுதியாகும். “வரிசையில் கடைசி மனிதரை” சென்றடைவதே மத்திய அரசின்  முக்கிய நோக்கமாகும்.

சீர்திருத்தங்கள் என்பது பிரதமர் மோடி எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகும்.

“ஆத்ம நிர்பார் பாரத்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு ஜூன் மாதம், ஆபத்தான தொற்று நோயை எதிர்த்து அரசாங்கம் வெளியிட்ட வேளாண் துறை சீர்திருத்தங்கள் வேறுபட்டவை அல்ல.

2022 ஆம் ஆண்டளவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, சீர்திருத்தங்கள் செய்வதற்கு, தன்னை அர்ப்பணித்த பின்னர், மோடி அரசாங்கம், விவசாயிகளின் நலனுக்கு எதிராக, செய்வதை யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா?

இந்த அரசாங்கமே, விவசாயிகளால் ஏற்படும் சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP), 50 சதவீதம் அதிகரிப்பு உள்ளிட்ட, 200 பரிந்துரைகளை செயல் படுத்துகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா மூலம், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் வருமானத்தை ரூ .6000 உடன் கூடுதலாக வழங்குகின்றது. ஒவ்வொரு காரீஃப் மற்றும் ரபி பருவங்களிலும் விதைப்பதற்கு முன்பு, விவசாய பணத்தை தங்கள் கைகளில் வைப்பதற்காக, அரசாங்கம் ஆண்டு தோறும், சுமார் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

விவசாயிகளுக்கான கிராமப்புற ஆதரவு அமைப்புகளை, அபிவிருத்தி செய்வதற்கும், விரிவு படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட, ரூ .100,000 கோடி, அர்ப்பணிக்கப்பட்ட விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, நிச்சயமாக விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்க முடியாது. விவசாயிகளின் நிலத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக “கிசான் சிச்சாய் யோஜனா மற்றும் வேப்பம் பூ பூசப்பட்ட யூரியா ஆகியவை, விவசாயிகளுக்கு எதிரானவையாக நிச்சயமாக இருக்க முடியாது!

கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை நடவடிக்கைகள், அரசியல் தந்திரங்கள் மற்றும் வாக்கு வங்கி அரசியலைக் கடந்து சென்றதன், காரணமாக,  விவசாய சமூகத்திற்கு நம்பிக்கை அளித்துள்ளன. மோடி ஆட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகள், ஏப்ரல், ஜூன் 2020 முதல் காலாண்டில், கோவிட் 19 தொடர்பான கடுமையான ஊரடங்கு காலத்தில், பண்ணைத் துறை 3.4 சதவீதமான, வளர்ச்சிகளைக் காட்டத் தொடங்கியது. இந்த வளர்ச்சி வேகம் ஜூலை – செப்டம்பர் 2020 இல், இரண்டாவது காலாண்டில், சமமான வளர்ச்சியுடன் தொடர்ந்தது.

பண்ணைத் துறை மற்றும் கிராமப்புற பொருளாதாரம் மீதான அரசாங்கத்தின் பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கை தெளிவாக இருத்தல், பண்ணைத் துறை சீர்திருத்தங்கள் ஏன் எதிர்க்கப்படுகின்றன? மனித வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒரு நெருக்கடியின் போது, விவசாயிகளின் வாழ்க்கையுடன் ஏன் விளையாட வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *