புதிய தடுப்பூசி கொள்கை – ஏன்? எதற்கு?

இந்தியா

தேசத்து மக்களுக்கு பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் நேற்று மாலை புதிய தடுப்பூசி கொள்கை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மத்திய அரசு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கொரோனாவினை ஒழிக்க தீவிரமாக பாடுபட்டு கொண்டிருக்கின்றது. தடுப்பூசி உற்பத்தி மிக மிக அதிகரிக்கபட்டிருப்பதால் விரைவில் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தபடும்.18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி வழங்கபடும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா என்ற தேசம் சுமார் 140 கோடி மக்களுக்கான சந்தை என்றே வெளிநாட்டு நிறுவனங்கள், இங்கு அவர்களது தரமற்ற பொருட்களை விற்று வந்தன. இங்குள்ள விளம்பர விற்பனை நிறுவனங்கள் மூலம் கேடு தரும் கெமிக்கல் பொருட்களை விற்று வந்தன. அதற்கு நமது அரசியல்வாதிகள், பிரபல சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் சிலர் துணை போயினர்.

இந்தியாவில் கொரோனா மருந்தை விற்றால் உலக கோடீஸ்வரனாகி 100 ஆண்டுகள் நிலைத்திருக்கலாம் என கனவோடு திரிந்த அமெரிக்க, ஐரோப்பிய நிறுவங்களை தடுத்து, இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி தயாரிப்பில் 50 சதவீதத்தை மத்திய அரசின் மூலம் வாங்கி, அதை இலவசமாக மாநில அரசுகளுக்கு கொடுத்து வந்தார் பாரத பிரதமர் மோடி. இனிமேல் தடுப்பூசி தயாரிப்பில் 75 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு இலவசமாக கொடுக்கும் என்று நேற்று அறிவித்துள்ளார்.

இந்த மாற்றத்துக்கு காரணம், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக தீவிரமாக இருக்கிறது; இது எதிர்பார்த்தது என்றாலும் அதன் வீச்சு கணிப்புக்கு அப்பாற்பட்டு இருந்தது. மத்திய அரசு மின்னல் வேகத்தில் களமிறங்கி, வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் உபகரணம் குவிக்கபட்டது, உள்ளூர் கம்பெனிகளின் ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கு திருப்பபட்டது, இந்திய ரானுவ விமானமும் கப்பல்களும் உலகெல்லாம் இருந்து கொண்டு வந்து தளவாடங்களை குவித்தன‌. இப்பொழுது நிலமை ஓரளவு கட்டுபட்டிருக்கின்றது.

இப்பொழுது 8 கம்பெனிகளை அசுரவேகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்ய சொல்லியிருக்கும் பிரதமர், இன்னும் ஓரிரு மாதத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி என அறிவித்துவிட்டார். இது போக குழந்தைகளின் மீதான கொரோனா அச்சுறுத்தலை தடுக்க மூக்குவழியாக மருந்து செலுத்தும் திட்டம் ஆய்வில் இருக்கின்றது என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுருக்கமாக சொன்னால் உலகின் மிகபெரிய வல்லரசுகளும், முன்னேறிய நாடுகளும் ஓடும் வேகத்திற்கு சற்றும் குறையமால் இந்தியாவினையும் இழுத்து கொண்டு ஓடுகின்றார் நம் பிரதமர் மோடி.

விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து உலகிலே முதல் முறையாக இந்தியாவில் அறிமுகபடுத்தி, அம்மருந்தை மோடி பெயரை சொல்லி குழந்தைகள் மூக்கில் ஊற்றி அந்த பெருமகனின் பெருமைகளை குழந்தைகள் மனதிலே பதியவைத்து நாட்டுபற்றை வளர்க்க வேண்டும். சோழநாட்டை பகைவரிடம் இருந்து மீட்ட இரும்பிடர் தலையன் போல இரும்பு தலைவன் மோடி இத்தேசத்தை காத்து நிற்கின்றார் என்கின்றார் மதுரையை சேர்ந்த கிருஷ்ணகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *