எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது.!ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி.!

8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான வேளாண் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து,அதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு கூறியதாவது:-

எட்டு மாதங்கள் ஆனால் என்ன எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. காலத்துக்கு ஏற்ப மக்கள் தேவை அறிந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்கைகளை வைத்து மக்களை பாதுகாக்க வேண்டும் ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது ஆனால் இன்றைக்கு வீட்டிலிருந்தபடியே தகவல் தொழில்நுட்பம் மூலம் எல்லா வேலையும் மக்கள் செய்து வருகிறார்.

திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது. 8 மாதத்துக்குள் தேர்தல் வரும் தேர்தலின் மக்கள் வாக்களிப்பார்கள் அந்த தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியே உறுதி. திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசிய போது நாம் கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை. அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதன் மூலம் அவர் மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக எந்த வேலையும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் துணை முதலமைச்சரும் இந்த தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்கி தேவையான நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன்மூலம் தமிழகத்தில் தொற்றுநோய் உள்ள 85 சதவீத நபர்களை குணப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது கோட்டையில் எந்த கோப்புகள் நிலுவையில் இல்லை கடைக்கோடியில் திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இன்றைக்கு அம்மாவின் சாதாரணமாக இருந்து பிரமிக்க வைக்கும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சாதனை மிகுந்த ஆட்சியாக நமது முதலமைச்சரும் துணை முதலமைச்சர் செய்து வருகின்றனர். இதைப் பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் அம்மா அரசின் மீது பல்வேறு பழி சுமத்தி வருகின்றனர். ஆனால் அம்மா அரசின் மீது மக்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாது அரசு அதிகாரிகளும் பாராட்டுகின்றனர். அதேபோல் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சியில் யுஜிசி வழிகாட்டுதல் படி செய்யப்பட்டுள்ளதாக, முதலமைச்சரும் உயர்கல்வி துறை அமைச்சரும் தெளிவாக உள்ளனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் பணியில் ஈடுபட்ட மின்சார ஊழியர் மீது மின்சாரம் தாக்கியது.! 40 அடி மின் கம்பம் உயரத்தில் நடத்த பரபரப்பு சம்பவம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *