திமுகவை யாரும் ஆட்டி பார்க்க வேண்டியதில்லை. ஏற்கனவே அது ஆட்டம் கண்டு தான் உள்ளது.! அமைச்சர் தாக்கு.!

தி.மு.க.வில் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து நீடிப்பது சந்தேகம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- திமுகவை யாரும் ஆட்டி பார்க்க வேண்டியதில்லை. ஏற்கனவே அது ஆட்டம் கண்டு தான் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தன்மானம் மிக்கவை. ஆனால் அவற்றை சீண்டிப் பார்க்கும் விதமாக அக்கட்சி தலைவர்களுடைய பேச்சு உள்ளது.

மக்கள் செல்வாக்கை திமுக இழந்து கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகள் அங்கு நீடிப்பது என்பது சந்தேகம் தான். திமுக பொதுச்செயலாளர் கூட்டணி கட்சிகளை எப்படி அணுகுகிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். நெல்லிக்கனி மூட்டை அவிழ்ந்ததை போல தான் திமுக கூட்டணி. கிளைமாக்ஸில் மாற்றங்கள் இருக்கும். எங்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சியாக உள்ளது. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நேற்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்திற்கு ஏற்கனவே வர வேண்டிய ரூ.12,000 கோடியில் நாம் கொடுத்த அழுத்தத்தில் ரூ.1,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கூட்டத்தில் நிதி தன்னாட்சி பாதிக்கப்படாத வகையில் மீதமுள்ள தொகையை பெறுவதற்கு வலியுறுத்துவோம். திமுகவில் தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டதை போல, அதிமுகவில் விரைவில் குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மூலம் அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

திமுக ஒரு ஏஜெண்ட் அரசியல் கட்சி, அது கட்சியல்ல, கந்துவட்டிக்கடை.! அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *