OBC ஆலோசனை கூட்டம் – மதுரையில் முக்கிய முடிவுகள்

பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டர் அமைப்பு சார்பில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ரெட்டியார் அமைப்பின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், நாடார் சமுதாயத்தின் சார்பாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன், தேவர் சமுதாயத்தின் சார்பில் தென்னிந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, அகமுடையார் சமுதாயம் சார்பில் வெங்கடேசன், சுந்தரபாண்டியன், முத்தரையர் சமுதாயம் சார்பில் டாக்டர் பன்னீர்செல்வம், ஒக்கலிக கவுடர் பி.எஸ்.வி ராஜேந்திரன், மகேசன், முத்துசாமி சுப்ரமணியன், மறவர் சமூகம் சார்பில் மாரிமுத்து, தேவாங்கர் சமூகம் சார்பில் ராஜேஸ்வரி, தங்கவேலு, ஆர். குணசேகரன் , அகமுடையார் சமூகம் சார்பில் பாலமுருகன், சுந்தரபாண்டியன் ஆர். செல்வராஜ் , மருதுபாண்டியன், சேனைத் தலைவர் சமூகம் சார்பில் சுந்தர், போயர் சமூகம் சார்பில் வெங்கடாசலம், முருகன் நகரத்தார் சமூகம் சார்பில் ஞானசம்பந்தன், பிள்ளைமார் சமூகம் சார்பில் வேலாயுதம், சங்கர நாராயணன், செந்தில்வேல் , பாலமுருகன், அண்ணாமலை ராஜன் செங்குந்தர் சமூகம் சார்பில் மா.ராமச்சந்திரன், சண்முகம் , பிறமலை கள்ளர் சமூகம் சார்பில் சின்னா, எஸ்.பி.ராஜேந்திரன் , எம்.பி. லட்சுமணன், ஜெயந்தன், உதயம் ராஜேந்திரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் : கடந்த மாதம் திடீரென்று தமிழக அரசு ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுப்பதற்காக ஆணையம் அமைத்து முன்னாள் நீதிபதி குலசேகரனை நியமித்திருக்கிறது. அந்த ஆணைய தலைவரை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். ஜாதி வாரி ஆணையத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இடம் பெற வேண்டும்.

குறைந்தது 5000 கோடி பட்ஜெட் இல்லாமல் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்க முடியாது. ஆனால் தமிழக அரசு தற்போது நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைத்திருக்கும் ஆணையம் என்பது வெறும் கண்துடைப்பு தான். பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக உள்ள 26.5 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக நிறைவேற்றி உள்ளீர்களா என தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

டாக்டர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தது போல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். குறைந்த பட்சம் 40 சதவீத இட ஒதுக்கீட்டையாவது கட்டாயம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தர வேண்டும். தற்போதுள்ள 26.5 சதவீதத்தில் தமிழக அரசு கைவைத்தால் தமிழக அரசுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எச்சரிக்கிறோம்.

தேர்தல் வரை அனைத்து மாவட்டங்களிலும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து கூட்டம் நடத்த உள்ளோம். தேர்தல் முடிந்த பின்பு 40 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். அனைவரும் ஜாதி பெயர்களை, தங்களது பெயர்களோடு இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றார். பின்னர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *