மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் கருத்துக் கணிப்பால் திமுக திகைப்பு.

அரசியல் இந்தியா தமிழகம்

அதிமுக கூட்டணிக்கு 130 தொகுதிகளில் வெற்றியும் திமுக கூட்டணிக்கு 100 தொகுதிகளில் வெற்றியும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 120- 130 தொகுதிகளில் வெற்றியும் திமு க கூட்டணிக்கு 100-110 தொகுதிகளில் வெற்றியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதிமுக கடைசி நேரத்தில் ..பட்டுவாடாவை சரியாக நடத்தி விட்டால் அதிமுக கூட்டணி 150 தொகுதிகளை
நிச்சயமாக எட்ட முடியும்

TN assembly polls: AIADMK-BJP begin seat sharing talks - DTNext.in

தினகரன் அதிமுக ஓட்டுக்களை சிதைப்பார் என்று தெரிந்தும் எடப்பாடி தினகர னை இந்த தேர்தலில் கண்டு கொள்ளாமல் இருக்க முக்கிய காரணம் ப.. தான்

நான் கடந்த லோக்சபா தேர்தலில் செல் லூரில் ஒருடீக்கடையில் தினமும் காலையில். பார்க்கும் பொழுது அதிமுக கரை வேட்டியை கட்டிக்கொண்டு டீ குடிக்க வருவார்கள்.அவர்களை பார்க்கும் பொழுது எனக்கு சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய கூட்டணி தானே என்று சந்தோசமாக இருக்கும். அதற்கு பிறகு தான் அவர்களின் சட்டை பாக்கெட்டில் உள்ள தினகரன் படத்தின் மூலமாக அவர்கள் அமமுக என்று அறிந்து கொள்வேன்.

ஆனால் இப்பொழுது அதே டீக்கடையில் தினமும் பார்க்கிறேன் அமமுக என்று சொல்லிக் கொண்டு யாரும் என்னுடைய
கண்ணில் சிக்கவில்லை.

அமமுகவினர் வேறு யாரும் அல்ல அதிமுகவினர் தான் அவர்களுக்கு யாருடைய ஆட்சி வந்தால் வாழ்க்கை ஓடும் என்று நன்றாகவே தெரியும்.

அதனால் எடப்பாடி அமமுகவினரால் அதி முகவின் ஓட்டு வங்கி பாதிக்க முடியாதபடி கடைசி கட்டத்தில் கூட அமமுகவினரை கவனித்து விடுவார் என்று எதிர்பா ர்க்கலாம்.

அதே மாதிரி அதிமுக கடைசி கட்ட களப்பணியாக பணத்தை அள்ளி விடும் என்று எதிர்பார்க்கலாம்..

இதனால் அதிமுக திமுக இடையே உள்ள கடுமையாக போட்டி நிலவும் தொகுதிக ளையும் அடித்து தூக்கி விடும் என்று உறு
தியாக எதிர்பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் ரங்கராஜ் பாண்டேவும் இப்பொழுது இறுதிக் கட்ட கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து விட்டார் இன்று 30 தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகள ப ற்றி அவர் கூறியதில் திமுக 17 அதிமுக
10 இழுபறி-3 என்று இருக்கிறது

சென்னை மண்டலத்தில் உள்ள இந்த 30 தொகுதிகளில் கடந்த மாதம் இதே ரங்க
ராஜ் பாண்டே திமுகவுக்கு 30 ல் 28 தொகுதிகளில் வெற்றி என்று கூறி இருந்தார்
ஆனால் ஒரே மாதத்தில் அதே சென்னை மண்டலத்தில் அதிமுக இப்பொழுது 10
தொகுதிகளை தொட்டு விட்டது.

இது தேர்தலின் பொழுது 15 ஆக உயர்ந்து விடும்.அதனால் சென்னை மண்டலத்திலேயே அதிமுக பிஜேபி கூட்டணிக்கு
முன்னிலை கிடைத்தாலும் ஆச்சரியம் அல்ல.சென்னையில் அதிமுக முன்னணி என்று வந்து விட்டாலே ஒட்டுமொத்த தமிழகமும் அதிமுகவிற்கு தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *