மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது தொடங்கின, எப்போது நிறைவுறும் என்பது குறித்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த பணிக்காக, பெரியார் பேருந்து நிலைய கடைகள் எல்லீஸ் நகருக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு கடை வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், அதனை நீக்க கோரி தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 18 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மாநகராட்சி அளித்த உறுதி சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, பணிகள் எப்போது தொடங்கின? எப்போது நிறைவுறும்? என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, உத்தரவிட்டனர்.