நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதே எங்கள் முடிவு.! நம்முடைய உரிமையை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.! முதல்வர் அதிரடி.!

நதிநீர் பிரச்சினையில் தமிழக உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தென்பெண்ணை ஆற்றை நம்பி தான் ஆறு மாவட்ட விவசாயிகள் இருக்கிறார்கள். தென்பெண்ணை ஆற்றில் நீர் கலங்கலாக தான் வருகிறது. இந்த ஆறு நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடக அரசு கோலாருக்கு ராட்சசபைப் போட்டு தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். இதனால் இந்த ஆறு மாவட்டவிவசாயிகளுக்கும் தென்பெண்ணை ஆற்றில் இனிவரும் காலங்களில் தண்ணீர்வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்கு அரசு என்ன செய்யப் போகிறது என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முதல்வர்.

ஏற்கனவே இந்த மாநிலத்திலே இருக்கின்ற நதிநீர் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அண்டை மாநிலத்திலிருந்து உற்பத்தியாகி வருகின்ற நீரை தடுக்க கூடாது என்று தெரிவித்திருக்கிறது. அப்படி தடுக்கின்ற பட்சத்தில், தண்ணீரை திருப்பி விடுகின்ற பட்சத்தில், வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. நம்முடைய உரிமையை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். உரிமையை நிலைநாட்டுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் நீட்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, நாங்கள் கடுமையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால், வெற்றி பெறவில்லை. நீதிமன்றம் வரை சென்றோம். ஆனால், நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை, நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், வேறு வழியில்லாமல் உச்சநீதிமன்றம் வரை சென்றும் முடியவில்லை. சட்டத்தின் மூலமும் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது.

மேலும்,தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இயல்பு நிலை திரும்பும்போது, பெற்றோர்களின் மனநிலையைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும். அதாவது, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என கருதுவார்கள், குழந்தைகளை பாதுகாப்பது அரசின் கடமை. இதையெல்லாம் ஆராய்ந்துதான் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது.!ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *