பழனி மலை கோயிலுக்கு செல்ல பயன்படுத்தப்படும் மின்இழுவை ரயிலில் நாளை முதல் (டிசம்பர் 1) மீண்டும் பக்தர்களை ஏற்றி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மின்இழுவை ரயிலில் பக்தர்கள் செல்ல தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் படிகள் ஏறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இருப்பினும் மாற்று திறனாளிகள் உள்ளிட்டோர் சிரமபடுவதால், மீண்டும் பக்தர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று 50 சதவீத பக்தர்களுடன் மின் இழுவை ரயிலை இயக்க கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது.