உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி பிரதமர் அறிவிப்பு!

அரசியல் இந்தியா

டெல்லி: உத்தரகண்ட் சாமோலியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ;2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Image result for சமோலி flood

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை திடீரென்று உடைந்து விழுந்தது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 125-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
வெள்ளப் பெருக்கு வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், பல்வேறு மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், உத்தரகண்ட் சாமோலியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ;2 லட்சம் வழங்கப்படும். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *