போயஸ் தோட்டத்திற்கு குறி வைக்கிறாரா ஸ்டாலின்?

அரசியல்

திமுகவின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியுடன் இன்று முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருந்தது. சாட்டையை சுழற்றி வேலை வாங்குவேன் என்று எல்லாம் பேசியது அதன் வெளிப்பாடே. திமுக ஆட்சியில் போது அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் தொடுத்த வழக்கு ஒன்றில் தான் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றில் ஜெ வசித்து வந்த அவரது “வேதாநிலையம்” நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தபட்டது. ஜெ. நினைவு இல்லமாக பராமரிக்க முடியாத படி சட்ட சிக்கல்கள் அப்போது எழுந்தன.

நீதிமன்றம் தமிழக அரசின் முதல்வர் இல்லமாக பராமரிக்க யோசனை சொன்னது. இதனை அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சரியான விதத்தில் அணுகாமல் கிடப்பில் போட்டு காலம் தாழ்த்தினார். அவருக்கு சசிகலாவின் செயல்பாடுகளை அறியும் நோக்கமும் ஆவலும் இருந்தது, கட்டாயமும் இருந்தது. அதே சமயம் அவரை எதிர்க்கும் துணிவும் இருந்தது. இதன் பொருட்டே சசிகலா விடுதலை ஆனப்பின்பு ஜெ சமாதிக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஜெ நினைவிடத்தை திறந்த சில தினங்களில் பராமரிப்பு காரணம் காட்டி மூட முடிந்தது.

போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதா முதல்வராக ஆகுவதற்கு முன்பே அவர் வாங்கிய சொத்து. அவர் காலத்தில் ஆளுமையின் வெளிப்பாடு அந்த இடம். அதே இடத்திற்கு அருகில் தான் ரஜினிகாந்த் இல்லமும் இருக்கிறது. சரியான விதத்தில் அணுகாத காரணங்களால் இன்று போயஸ் கார்டனின் வேதா இல்லம் சட்ட சிக்கலில் சிக்கி இருக்கிறது. அதனை தற்போது பதவிக்கு வரும் தமிழக அரசு முந்திக் கொண்டு கையகப்படுத்தும் வேலைகளை திரை மறைவில் அரங்கேற்ற ஆய்தமாகி வருகிறதாக ஒரு தகவல் வருகிறது. அதனை தமிழக முதல்வர் இல்லமாக மாற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனராம்.

தமிழக முதல்வருக்கு என தனிப்பட்ட இல்லம் ஏதும் இதுவரை காலமும் தமிழகத்தில் இருந்தது இல்லை, அதற்கு அவசியம் ஏற்படவும் இல்லை. அதனால் அந்த குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கண கச்சிதமாக காய் நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். ஸ்டாலின் தற்சமயம் வரை ஆழ்வார்பேட்டையில் தான் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அவரால் முடிந்தால், தமிழக முதல்வராக போயஸ் கார்டனில் வேதா இல்லத்தில் குடியேறிட முடியும். இதன் மூலம் அதிமுக வை வெற்றி கொள்ள பார்க்கிறது திமுக தலைமை; மனதளவில் பிடிமானம் இல்லாத அக்கட்சி உறுப்பினர்களை திமுகவில் இணைத்து கொண்டு விடமுடியும் என்கிறார்கள். இதற்காகவே வேதா நிலையத்தை நோக்கி காய் நகர்த்துகிறார்கள் என்கிறது அரசியல் வட்டாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *