சென்னை வடபழனியில் பேருந்துக்குக் காத்துநின்ற இளம்பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரைப் பொதுமக்கள் அடித்து உதைத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இளம்பெண், நேற்றிரவு பணி முடிந்து வடபழனி நூறடிச் சாலையில் பேருந்துக்காகக் காத்து நின்றார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் தன்னுடன் பைக்கில் வரும்படி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். உடன் வர மறுத்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார்.
இதைக் கண்ட பொதுமக்கள் கூடி நின்று அவரை அடித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜு என்பதும், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது.