பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேதனை !…செங்கோட்டையில் தேசியகொடி அவமதிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது !…

Uncategorized அரசியல் இந்தியா

கொரோனா பெருந்தொற்று, மற்றும் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. மக்களவை மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ஜனவரி 26 ஆம் தேதி செங்கோட்டையில் மூவர்ண கொடி அவமதிக்கப்பட்ட துரதிஷ்டவசமானது. எந்தச் சூழ்நிலையிலும் சட்டங்களும் விதிகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும். கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு சில அரசியில் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. சில அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பும் இருக்கிறது. இந்த சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசாங்கம் பின்பற்றும் என்று நம்புகிறேன்.

Parliament Attack 2001: President Ram Nath Kovind Says Nation Gratefully  Remembers Brave Martyrs Who Laid Down Lives Defending Parliament

இந்த சட்டம் தொடர்பாக அரசின் பிரச்சாரம் இந்திய விவசாயத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்துவதன் மூலம் எம்.எஸ்.பி ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. கொள்முதல் மையங்களும் அதிகரித்திருக்கிறது. பழைய நீர்ப்பாசன திட்டங்களுடன் நவீன நீர்ப்பாசன தொழில்நுட்பமும் விவசாயிகளை சென்றடைந்துள்ளது. மைக்ரோ பாசனம் மூலம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். பிரதமரின் திட்டங்கள் ஏழைப் பெண்களை சென்றடைந்துள்ளது. ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையேயான இடைவெளியை அரசு வெகுவாக குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. காந்தியின் 150 -வது பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடும் போது நாடு சுத்தமாக இருக்க வேண்டும். அரசின் கொள்கைகள் விவசாயிகளின் கடும் உழைப்பு காரணமாக உணவு தானிய உற்பத்தி 27.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் மருத்துவ சேவை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *