ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் அதிரடி.

அரசியல்

நேற்று ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை அதி அற்புதமானது. காங்கிரஸ் மற்ற இதர எதிர்கட்சிகளின் கோமாளித்தனத்தை, இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார். தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் இது பிரதானமாக பேசப்படுகிறது.

Image result for narendra modi

சரண்சிங், மன்மோகன்சிங், சரத்பவார் போன்றவர்கள் தொடர்ச்சியாக பேசிய ஒன்றை, அவர்களால் செய்ய முடியாத ஒன்றை, புதிய வேளாண் சட்டம் வழியாக என் தலைமையிலான அரசு செய்திருக்கிறது என வாசித்தே காண்பித்துவிட்டார் பாரத பிரதமர் மோடி.

அதோடு விவசாயிகளில் 68 சதவிகிதம் பேர் சிறு,
குறு விவசாயிகள் என முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் கூறியிருந்தார். 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகளிடம் இரண்டு ஏக்கருக்குக் குறைவான நிலமே இருக்கிறது. அந்த 12 கோடி விவசாயிகளுக்காகத்தான் இந்த சட்டம் என தெளிவாக சொல்லிவிட்டார் பிரதமர்.

ஜனநாயகத்தை பற்றியெல்லாம் யாரும் நமக்கும் பாடம் எடுக்க தேவையில்லை. இந்தியா உலகில் பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, இது ஜனநாயகத்தின் தாய் என்று சொல்ல வேண்டும். நம் புராதன அரசே 81 ஜனபதங்களாக ஜனநாயக முறையில் குடியாட்சியில் இயங்கியது. அந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம் என்று அடித்து சொல்லியிருக்கிறார்.

இந்தியாவில் தேசியவாதம் என்பது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியது போல,”சத்தியம், சிவம், சுந்தரம்” ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. பல ஆண்டுகளாக நாம் அவரின் கருத்தியலை மறந்துவிட்டு, இப்போது தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு நேதாஜி பெயரை சொல்லும் போது ‘ஆசாத் ஹிந்து பௌஜ்’, அதாவது – அரசின் முதல் பிரதமர் என்று சொல்லி அதை நாடாளுமன்றத்திலேயே பதிய வைத்துவிட்டார் பிரதமர் மோடி என்பது சாதரண விஷயமல்ல.

எல்லா போராட்டத்திலும் ஈடுபடும் யோகேந்திர யாதவ் கோஷ்டிகள், மேற்கு வங்கத்தில் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்து ஜனநாயக படுகொலை செய்யும் மம்தா கட்சி, ஜனநாயகம், பேச்சுரிமை பற்றி எல்லாம் வகுப்பெடுப்பது என எல்லாவற்றையும் கிழித்து தொங்கவிட்டுவிட்டார். எதிர்கட்சிளை அடித்து வீழ்த்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

குறைந்த பட்ச ஆதார விலை இருந்தது, குறைந்த பட்ச ஆதார விலை இருக்கிறது, குறைந்த பட்ச ஆதார விலை வரும் காலங்களிலும் இருக்கும். ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடரும், மண்டிகள் நவீனமயமாக்கப்படும் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *