மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார் பேராசிரியர்

அரசியல்

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணியில் மதுரை வடக்கு தொகுதியானது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

SRINIVASAN NEXT BJP PRESIDENT? HE HAS THE EDGE IN T.N: SOURCES - Lotus  Times | Madurai | Tamilnadu | Lotus Times

இதனை முன்னிட்டு, நேற்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளருமான பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர்.ராஜு அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து மதுரை வடக்கு தொகுதியின் அதிமுகவின் 2ஆம் பகுதி செயலாளர் ஜெயவேல் மற்றும் 2-ஆம் தொகுதிக்கு உட்பட்ட 9 வட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாஜக-அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *