நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: தொடங்கியது கவுண்ட் டவுன்

இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை காலை 10.24 மணிக்கு, வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படும். நடப்பு 2021ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.

இதில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா-1 என்ற செயற்கைகோள் முதன்மையாக இடம் பெற்றுள்ளது. அதனுடன், இந்தியாவைச் சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் தொகுப்பைச் சார்ந்த 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஷ்தவான் சாட், இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உள்பட மொத்தம் 19 செயற்கைகோள்கள் ஏவப்படுகின்றன.

இதில், முதன்மை செயற்கைகோளான அமசோனியா-1, பூமியில் இருந்து 637 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகள் சரிபார்க்கப்பட்டு, இன்று காலை 8.54 மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியது. இஸ்ரோ விஞ்ஞானிகள், செயற்கைகோள் ஏவும் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *