ஊருக்கேற்ப பச்சோந்தித்தனமான பேச்சு:சர்ச்சையில் சிக்கிய ராகுல்

அரசியல் இந்தியா

வட இந்தியாவைவிட கேரள மக்களுக்கு அரசியல் நுண்ணறிவு ஆழமாக உள்ளது என்று, ஓட்டுக்காக கேரளாவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து, பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரம் என்று வந்துவிட்டால் பிரியாணி செய்வது, மாட்டு வண்டி ஓட்டுவது, மீனவர்களுடன் படகில் சென்று மீன் பிடிப்பது என்று பல்வேறு தேர்தல் கால ஸ்டண்ட் அடிப்பது வழக்கம். ஆனால், கேரளாவில் அவர் பேசிய ஒரு விஷயம், இந்திய அளவில் அவருக்கு எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

ராகுல், தற்போது கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இதற்கு முன்பு, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 3 முறை எம்.பி.யாக இருந்த, ராகுல். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டார். இதில், அமேதியில் பா.ஜ.க. வின் ஸ்மிருதி இரானியிடம் படுதோல்வியை தழுவினார். அந்த ஏமாற்றத்தில் இருந்து ராகுல் இன்னமும் மீளவில்லை போலிருக்கிறது.

அதை பிரதிபலிப்பது போல், கேரளாவில் நேற்று பிரசாரம் செய்த ராகுல், கேரள வாக்காளர்களை உயர்த்தியும், வட இந்தியர்களை மட்டம் தட்டியும் பேசினார். ராகுல் பேசும்போது, வடமாநிலத்தில் வேறுவிதமான அரசியல் உள்ளது. எனது அரசியல் வாழ்வில் முதல் 15 ஆண்டு காலம் நான் வடக்கே தான் எம்.பி.ஆக இருந்தேன். அங்கு வேறுவிதமான அரசியலை அறிந்திருந்தேன்.

ஆனால், நான் கேரளாவுக்கு மாறுதலானது புத்துணர்வைத் தந்துள்ளது. கேரள மக்கள், சமூக பிரச்சினைகள் மீது மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக நாட்டம் கொண்டுள்ளனர். அரசியலை அணுகுவதில் அவர்களிடம் நுண்ணறிவு உள்ளது என்றார்.

வாக்கு சேகரிப்பதற்காக ஒரு தரப்பினரை உயர்த்தியும், மற்றொரு தரப்பினரை அவமதிப்பது போல் ராகுல் பேசியிருப்பது, கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலரும், ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரிவினையை தூண்டும் வகையில் ராகுல் பேச்சு அமைந்துள்ளதாக, பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

இதேபோல், சமூக வலைதளங்களிலும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கண்டனங்களை பதிவிட்டனர். வெற்றி பெற்ற தொகுதியை புகழ்வது இயல்புதான்; அதற்காக, 3 முறை வெற்றியை கொடுத்த வட மாநிலத்தவர்களை இழிவுப்படுத்துவதா என்று, நெட்டிசன்கள் ராகுலை வறுத்தெடுத்தனர்.

வாக்கு சேகரிக்கச் செல்லும் இடத்திற்கேற்ப தனது நிறத்தை மாற்றிக் கொள்வதை ராகுல் வழக்கமாக கொண்டுள்ளார். மதுரை வந்தபோது ஜல்லிக்கட்டை புகழ்ந்தார்; ஜல்லிக்கட்டை காங்கிரஸ் அரசு தடை செய்தது என்பதை கூட அவர் உணரவில்லை. அதேபோல், பிரியாணி செய்வது, மாட்டுவண்டி ஓட்டுவது, மீன் பிடிப்பது என்று ராகுல் பல வேடமிட்டாலும், இது பச்சோந்தித்தனமான தேர்தல்கால ஸ்டண்ட் என்று மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *