பாஜகவில் இணையுங்கள் மாரிதாஸ் …

நெஞ்சில் உரம், நேர்மைத் திறம், தார்மீக கோவம் – இந்த இளைஞர் தான் மாரிதாஸ்.
சமூக வலைத்தளங்களில், புரட்சியாளர் என்றால் அது மாரிதாஸ்.  தன்னுடைய எழுத்துக்கள் மற்றும் பேச்சின்மூலம் பல லட்சம் தமிழர்களின் மனதை கவர்ந்தவர்.
சமூக வலைத்தளம் என்றாலே சிலருக்கு, மெசேஜ்களை படிக்காமலே ஃபார்வேர்டு செய்வது தான்.  ஒருசிலர் தனக்கு ஆதரவான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்களை அஸ்திவாரமாக வைத்து கட்டுரைகளையும் மீம்ஸ்களையும் எழுதி பரப்புவார்கள்.
ஆனால் மாரிதாஸ் என்ற ஒரு இளைஞன் சமூக வலைதளத்தில் வந்தபிறகு, சமூக வலைத்தளத்தின் மதிப்பு கூட அதிகரித்தது.
NEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட  மாரிதாசுக்கு தடை! | High Court Ban Against Controversial Video About News  18 Tamilnadu Form Maridas - NDTV Tamil
ஒரு காலகட்டத்தில் மிக விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை போலத் தான் மாரிதாஸ் அவர்களின் பதிவுகள் இருக்கும். பல ஆயிரம் வாசகர்கள் இந்த பதிவுகளை விரும்பி படிப்பார்கள்.  மாரிதாஸின் பதிவுகள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் முறை பகிரப்படும்.  ஒவ்வொரு பதிவின் பின்னாலும் ஆழமான தேடல், அற்புதமான உழைப்பு நம் கண்முன்னே தெரியும். ஒவ்வொரு வார்த்தையும் கூட தேடித்தேடி செதுக்கிய வார்த்தைகள்.
பிற்காலத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட துவங்கிய பின்னர், மாரிதாஸ் பல லட்சம் தமிழக மக்களை ஒரே சமயத்தில் சிந்திக்க வைத்தார்.  ஊடகங்கள் திமுகவின் பினாமியாக செயல்படுவதை எதிர்த்து, தனியே நின்று போராடி, வெற்றியும் அடைந்தவர் மாரிதாஸ்.
உண்மை, நேர்மை, தன்னலம் கருதாத உழைப்பு மற்றும் தேசபக்தி கொண்ட இளைஞர் மாரிதாஸ்.  திமுக என்ற தீய சக்தி தமிழகத்தில் தலை எடுக்கக்கூடாது என்று அயராது பாடுபட்டவர் மாரிதாஸ். இவர் கண்டிப்பாக பல எதிர்ப்புகளை சந்தித்து இருக்கக்கூடும்.  இருந்தாலும் எப்போதுமே பின்வாங்கியதில்லை.
இந்திய தேசத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது மாரிதாசுக்கு அளப்பரிய மரியாதை உண்டு.
தமிழகத்தைப் பொருத்தவரை, தான் ரஜினிகாந்த்தின் ஆதரவாளர் என்பதை மாரிதாஸ் என்றைக்குமே மறைத்ததில்லை. தனது உடல்நிலை காரணமாக, எடுத்துக்கொண்ட செயல் பாதியிலே நின்று விடக்கூடாது, தன்னை நம்பி வந்தவர்கள் மோசம் போய் விடக்கூடாது, என்ற ஒரே காரணத்திற்காக மற்றவர்கள் கேலி செய்தாலும் பரவாயில்லை, என்று நேர்மையாக நின்று, தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்பதை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று வாழ்ந்த தேவர் பெருமகனார் மண்ணில், தேச விரோதிகளும், தெய்வ விரோதிகளும் சில காலம் ஆட்சி புரிந்தனர்.  தமிழகத்தில் மீண்டும் ஆன்மீக அரசியலை தழைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் ரஜினிகாந்தின் லட்சியம்.
ரஜினிகாந்த் விரும்பிய ஆன்மீக அரசியலை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே அளிக்க முடியும்.  எனவே நேர்மையும் துணிச்சலும் அறிவும் ஆற்றலும் இணைந்த மாரிதாஸ் போன்ற இளைஞர்கள், ரஜினிகாந்த் விரும்பிய ஆன்மீக அரசியலை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தேசிய சிந்தனை கொண்ட பலரின் விருப்பமாக உள்ளது.
“மாரிதாஸ் அவர்களின் பல லட்சம் ஆதரவாளர்களில் நானும் ஒருவன் என்ற முறையில், பாரதிய ஜனதா கட்சியில் இணையுங்கள் மாரிதாஸ், என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறார் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.
தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் , மாரிதாஸ் மீது புகார் !! சைபர்  கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு ..
10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து வரும் திமுக உடன் பிறப்புகள், எப்படியாவது ஆட்சியில் அமர வேண்டும், 10 ஆண்டுகள் சம்பாதிக்க முடியாததை வட்டியுடன் சேர்த்து சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை பிடிப்புடன் காத்திருக்கின்றனர்.  2021 சட்டசபை தேர்தலில் ஒருவேளை திமுக ஜெயித்து விட்டால், தமிழகத்தை, தமிழை, இந்துக்களை, ஆத்திகர்களை, நேர்மையான அதிகாரிகளை, திரைப்படத் துறையை மட்டுமல்ல, பொதுமக்களையும் கூட, இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.
தமிழகத்திலுள்ள 66000+ வாக்குச்சாவடிகளுக்காகவும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.  ரஜினி விரும்பிய ஆன்மீக அரசியல் தமிழகத்தில் அமைப்பதற்காக பல லட்சம் இளைஞர்கள் தயாராக இருந்தனர்.  அந்த இளைஞர்கள் அனைவருமே பாஜகவில் இணைந்து தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு விரோதமான திமுக ஆட்சி அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், என்கிறார் அரசியல் நோக்கர் ராதாகிருஷ்ணன்.
அண்ணாமலை ஐபிஎஸ் பாஜகவில் இணைந்து இளைஞர்களை வழி நடத்துவது போல மாரிதாஸ் அவர்களும் பாஜகவில் இணைந்து இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழி அமைத்துத் தரவேண்டும் என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.
பாரதிய ஜனதாக் கட்சிக்கு வாங்க மாரிதாஸ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *