ரஜினி கட்சி ஆரம்பம் , ஆழ்ந்த யோசனையில் கமல்

ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக ரஜினி அறிவிப்பு புதிய கட்சி துவங்குவதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் – ரஜினி

மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என ரஜினி ட்வீட்

2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி ,மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான ஆன்மீக அரசியல் உருவாகும், 2021ல் தமிழகத்தில் அதிசயம், அற்புதம் நிகழ்வது உறுதி

தமிழகத்தில் ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகும், புதிய கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டி என்று 2017 டிசம்பர் 31ல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ரஜினி

புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்து 3 வருடங்களுக்கு பிறகு கட்சி துவங்கும் தேதியை ரஜினி அறிவிக்க உள்ளார் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார் ரஜினி, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அரசியல் களத்திற்கு தயாராக உள்ளதாக தகவல் சட்டப்பேரவை தேர்தலில் தனியாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டி என்று ஏற்கனவே ரஜினி கூறியிருந்தார்

இதை தொடர்ந்து ரஜினி தற்பொழுது அரசியலுக்கு வரமாட்டார் என்று எண்ணி கமல் அவரது கட்சியான மக்கள் நீதி மய்யம் தொடங்கி வேலை செய்து வருகின்றனர் தற்பொழுது ரஜினி யும் புதிய கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வது என்று ஆழ்ந்த யோசனையில் கமல் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *