ராமர் போல் வில்லை வளைத்து முரட்டு போஸ் கொடுத்த ஹீரோ…வைரலாகும் ராஜமவுலியின் RRR பட போஸ்டர்

இந்தியா சினிமா தமிழகம்

இந்திய சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான். பாகுபலி பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்

பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ராஜமௌலி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து RRR என்ற படத்தில் நடித்திருந்தனர்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி கிட்டத்தட்ட 400 கோடி செலவு செய்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

RRR-cinemapettai

அந்தவகையில் ராம்சரன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று RRR படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ராம்சரண் கையில் வில்லை வைத்துக்கொண்டு ராமர் போல போஸ் கொடுத்துள்ளார். கட்டுடல் மேனியில் ராம் சரணை ராமர் வேடத்தில் பார்க்கும்போது ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர். இந்த போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *