பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பள பளக்கும் சாலைகள், புதுப்பொலிவு பெறும் பூங்காக்கள்

அரசியல்

பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் சென்னை வருகையையொட்டி, விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன

புதுடெல்லியில் இருந்து விமானத்தில் காலை 10.35 மணிக்கு சென்னை வந்து சேரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரீனாவில் உள்ள அடையாறு -I.N.S விமானப்படை தளத்திற்கு வந்திறங்குகிறார், இதற்கான ஹெலிகாப்படர் பயண ஒத்திகையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்,

Image result for narendra modi

வேப்பேரி – நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை துவக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, பள பளக்கும் சாலைகள், சாலை சந்திப்பில் அழகிய பூங்கா, காவி வர்ணத்தில்
நடை மேடை , கட்டிட இடிபாடுகளை மறைக்க திரைச்சீலை என அப்பகுதி காட்சி அளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *