விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்!சசிகலா அதிரடி அறிவிப்பு

அரசியல் தமிழகம்

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு துணை நிற்பேன்; விரைவில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று, சசிகலா அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா, சென்னை தியாகராயநகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது: இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். அம்மாவின் கனவு நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து தேனீக்கள் போல் உழைக்க வேண்டும்

ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக சேர்ந்து, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம். தேர்தலில் நம்முடைய இலக்கே வெற்றி மட்டும்தான். புரட்சித்தலைவி எம்.ஜி.ஆர். நமக்கு சொல்லிவிட்டு சென்றது , தமிழகத்தின் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்பது தான்.

எனவே, அதை மனதில் வைத்து நம்முடைய உடன்பிறப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும். அதை செய்து காட்டுவீர்கள் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் உங்களுக்கு துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களையும் ,பொதுமக்களையும் சந்திக்க வருவேன் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று, சசிகலா கூறினார்.

பெங்களூரு சிறைவாசம் முடித்து சென்னை திரும்பிய சசிகலா, எந்த பொது நிகழ்ச்சியிலோ அல்லது செய்தியாளர்கள் சந்திப்பிலோ கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வந்தார். இந்த சூழலில், தனது நெருங்கிய தோழியான ஜெயலலிதாவின் பிறந்த நாளில் இந்த அறிவிப்பை சசிகலா வெளியிட்டிருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *