மகாராஷ்டிரா மாநில இரத்த வங்கிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மட்டுமே இரத்தம் இருப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல்

இந்தியா தமிழகம் நகரம்

மகாராஷ்டிராவில் உள்ள இரத்த வங்கிகளில், மருத்துவ தேவைக்கான இரத்தம், அடுத்த 7 நாட்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாக, வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, குருதி கொடையளிக்க தன்னார்வலர்கள் முன்வராததால், இரத்த வங்கிகளில், இரத்தம் இருப்பு முற்றாக குறைந்துள்ளது.

How IoT Helps Blood Banks Reduce Waste and Save Lives

மும்பை உள்ளிட்ட இடங்களில் குருதி கொடையாளர்களில் பெரும்பாலானோர் சாப்ட்வேர் உள்ளிட்ட ஐ.டி துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தற்போது, வீட்டிலிருந்து பணிபுரிவதால், இரத்த தானம் முற்றாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா மற்றும் பிற நோயாளிகளுக்கான இரத்த தேவை அதிகரித்திருப்பதால், அவசர சூழலை கருதி, உடனடியாக குருதி கொடையளிக்க முன்வருமாறு, தன்னார்வலர்களுக்கு, மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *