சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்

தமிழகம்

சிவகாசி அருகே காளையர்குறிச்சியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்த்தில், 6 பேர் உயிரிழந்தனர். 14 பேர் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்குள்ள ஆலை ஒன்றில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்தன. இந்த வெடிவிபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அறைக்குள் சிக்கியிருந்த இரண்டு பெண் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தின் சோகம் விலகுவதற்குள் மற்றுமொரு விபத்து நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நடந்துள்ள மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *