பூமியை தாக்க இருக்கும் சூரிய புயல்!

சூரியனின் மேற்பரப்பில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக உருவான பிளாஸ்மாவும் காந்த மின்னூட்டம் பெற்ற  துகள்களும் பூமியை நோக்கி வந்துள்ளது.

Four New Asteroids are Approaching Earth This Weekend, Says NASA

இது ஒரு மிதமான மின்காந்த சூரிய புயலாக இருக்கும் என்பதால், பூமியில் ரேடியோ, ஜிபிஎஸ் சேவைகள் மற்றும் உயர் அழுத்த மின் வடங்கள் வியாழக்கிழமை முதல்  பாதிக்கப்படலாம் என அமெரிக்காவில் உள்ள தேசிய வானிலை சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை இதன் பாதிப்பு நீடிக்க வாய்ப்புள்ளது,

சூரிய துகள்கள் பூமியின் காற்றுமண்டலத்தில் கலக்கும் போது வடதுருவத்தில் ஏற்படும் ஒளி பென்சில்வேனியா முதல் ஓரிகான் வரை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன் தனது புதிய 11 வருட கால சோலார் சைக்கிள் எனப்படும் சூரியகாந்த வீச்சு காலத்திற்குள் நுழைகிறது.

இதன் காரணமாக இனிமேல் அடிக்கடி அதன் மேல்பரப்பில் வெடிப்புகள் ஆக்ரோஷமாக கிளம்பும். வரும் 2025 ல் அது மிகவும் உக்கிரமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சூரிய புயல்கள்  பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *