சோனியா-அழகிரி சந்திப்பு. சண்டையா? சமாதானமா? ஸ்டாலினின் நிலை என்ன?

திமுக-காங்கிரஸ் உறவு 2ஜி வழக்கில் ஆரம்பித்து, கன்னித்திவு கதை போல் இன்றளவும் முடியாமல் தொடர்கதையாகி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் துனைவி தயாளு அம்மாளை சிபிஐ விசாரிப்பில் தொடங்கி, கனிமொழியை திகார் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது, போன்ற பல்வேறு உரசல்கள் வந்தாலும், இரு கட்சியினரும் வேறு யாரின் தயவிலும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தால் இணக்கமாக செயல்படுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிதம்பரம்-கருணாநிதி உறவு தான் இதற்கு வேராக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஆனால் கருணாநிதி மறைவிற்கு பிறகு பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல, சொந்த கட்சி தொண்டர்களையும் மதிப்பதில்லை என்ற நிலை தான். மேலாண்மை படிப்புகள் முடித்த பலரும், சபரீசன் போன்ற உறவுகளும், குரங்காட்டிகளை போன்று ஸ்டாலினை ஆட்டுவித்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் என்பது வேறு. சொந்தமாக சிந்தித்து, சுயமாக முடிவு செய்து, சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு அரசியல் செய்பவர்களே தோற்றுப் போகும் கலம் இது.

யாரோ சிலர் தயாரிக்கும் அறிக்கையை மக்கள் முன் வாசித்துவிட்டு செல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது திமுக தலைவருக்கு புரியுபோவது இல்லை. தான்தோன்றி தனமாக இவர் செயல்படுவதால் திமுக தொண்டர்கள் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சமூக வலைதளங்களில் பிற கட்சியினரிடம் அவமானப்படுகின்றனர்.

சிதம்பரம் திகார் சிறையில் அடைபட்டதை வெடி வெடித்து கொண்டாடிய திமுக தலைமைக்கு, சிதம்பரம் தான் யார் என்பதை வெளியே வந்தவுடன் நிரூபிக்க தொடங்கி விட்டார். நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும், அநேகமான தலைவர்களை அள்ளிச் சென்றது அதிமுக தான். இதில் காங்கிரஸின் பங்கு மிகவும் முக்கியம். கிங் மேக்கராக காங்கிரஸ் வலம் வந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட துரைமுருகனிடம் பேசியுள்ளார்.

இதனை ஸ்லீப்பர் செல்ஸ் மூலம் மோப்பம் பிடித்த சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியை தூண்டிவிட்டு வேடிக்கை காட்டினார். அப்போது தான் ஸ்டாலினிக்கு அரசியல் புரிந்து இருக்கிறது. தாமதிக்காமல் டெல்லி முகவர்களை தொடர்பு கொண்டு சோனியாவிடம் பேச சொல்லியிருக்கிறார்.

சோனியாவும் அழகிரியை டெல்லிக்கு அழைத்து விசாரித்துள்ளார். இது குறித்து நமக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி அளித்த போது: சோனியா காந்தி, என்னை அழைத்து தி.மு.க பிரச்னைகள் குறித்து விவாதித்தது உண்மைதான். எல்லா விஷயங்களையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அவர் கூறிய படியே எங்கள் கூட்டணி இனி செல்லும். கடல் போன்ற எங்கள் அமைப்பில் சிறு துளியில் மாற்றம் ஏற்பட்டது, அவ்வளவுதான், என்று கூறினார்.

ஆக, தற்சம்யம் “சண்டை இல்லை சமாதானம் தான்” என்று டெல்லி தலைமை முடிவு செய்து அனுப்பியிருக்கிறது. ஆனால் அடிபட்ட பாம்பாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம் திமுக தலைவர் ஸ்டாலின். என்று என்ன வெடிக்கும் என்று விரைவில் தெரியவரும் என்கின்றார் திமுகவின் மூத்த நிர்வாகி.

 

 

 

பச்சை பொய்யை அவிழ்த்து விட்டுகிறார் ஸ்டாலின்!தி.மு.க. தேய்ந்து வருவது நிரூபணமாகி விட்டது! வெளுத்து வாங்கும் எடப்பாடியார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *