தமிழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் முரளிதரன்.! நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்த பேராசிரியர்.!

இலங்கை கிரிக்கெட் அணியில் இடப்பெற்று சாதனை படைத்துள்ள இலங்கை தமிழர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது, இந்த படத்திற்கான அறிமுக புகைப்படமும் வெளியானது, இந்நிலையில் உலக அளவில் சாதனை படைத்த தமிழர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக தமிழகத்தில் சில அரசியல் கட்சி தலைவர் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் தமிழ் சினிமா துறையை சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா போன்ற சில சினிமாத்துறையை சேர்ந்தவர்கள், சகநடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இந்நிலையில் கடும் அச்சுறுத்தலுக்கு பின் நடிகர் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார், இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராக குரல்கொடுத்தவர்களை கண்டித்தும், பாஜக பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, மும்பையில் நிழல் உலக தாதாக்கள் இந்தி சினிமா உலகில் உள்ள முக்கிய நடிகர்கள், மற்றும் நடிகைகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, யார் எந்த படத்தில் நடிக்க வேண்டும், எந்த படத்தில் நடிக்க கூடாது என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள், அதே போன்று தமிழகத்தில் தற்போது சிலர் செய்து கொண்டிருக்கின்றனர், இது கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது, இதை சினிமா துறையை சேர்ந்த அனைவரும் கண்டிக்க வேண்டும், யார் எந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற சுதந்திரம் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு உண்டு.

நடிகர் விஜய் சேதுபதி இந்த விவகாரத்தில் பின்வாங்கியது தேவையற்றது என தெரிவித்த பேராசிரியர், மற்ற நாடுகளில் ஒரு தமிழன் சாதனை செய்தால் அதை கொண்டாடுகிறோம், அதையே இலங்கையில் பிறந்த ஒரு தமிழன் சாதனையை கொண்டாட கூடாதா.? என்றும், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆராச்சியாளர்கள், தமிழ் தொண்டு செய்தவர்கள் பலர் தமிழக்தில் இருந்தார்கள், அவர்களில் சிலர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக கூட செயல்பட்டாலும் அவர்களின் தமிழ் தொண்டு பற்றி நாம் சாதனையாக இன்றளவும் பேசி வருகின்றோம்.

அதே போன்று முத்தையா முரளிதரன் ஒரு விளையாட்டு வீரர், அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அரசியலில் இடம் பெற்று அவர் தமிழர்களுக்கு எதிராக எந்த முடிவு எடுக்கவில்லை, விளையாட்டு துறையில் சாதித்த ஒரு தமிழனை கொண்டாடாமல் அவருக்கு எதிராக குரல் கொடுப்பது தவறு என சுட்டி காட்டிய பேராசிரியர், மேலும் ஈழ படுகொலைக்கு பொறுப்பெற்று கொள்ளவேண்டிய காங்கிரஸ், திமுக போன்ற காட்சிகளை என்ன செய்வது.? காங்கிரஸ் ஈழ படுகொலையை முன்னின்று நடத்தியது, திமுக அதை மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்தது, ராஜபக்க்ஷே கொடுத்த விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட திருமாவளவன், கனிமொழி ஆகியோரை என்ன செய்வது.? என சரமாரியாக கேள்வி எழுப்பிய பேராசிரியர்.

சினிமா துறையை சேர்ந்த அனைவரும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு அளிக்க வேண்டும், தற்போது சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் அமைதியாக இருந்தால், மும்பையில் உள்ள நிழல் உலக தாதாக்கள் போன்று தமிழ் திரையிலும் யார் எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சில அரசியல் தலைவர்கள் கட்டுப்பாட்டில் தமிழ் திரையுலகம் சென்று விடும் என எச்சரித்த பேராசிரியர், நடிகர் விஜய் சேதுபதியை அச்சுறுத்திய சக்திகளுக்கு தனது கடுமையான கண்டனத்தை பாஜக மாநில பொதுச் செயலாளர், பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தெரிவித்து கொண்டார்.

ஜெகத்ரட்சன், பொன்முடி மகனை தொடர்ந்து துரைமுருகன் மகனை சுற்றி வளைக்கிறது அமலாக்க துறை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *