மீண்டு(ம்) வந்தோம்

அரசியல் தமிழகம்

தமிழக தேர்தல் களத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை; ஆனால் தமிழக அரசியல் களத்தில் மிக பெரிய மாற்றத்தை எதிர் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. 23 ஏப்ரல் 1644 ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் ஜார்ஜ் கோட்டை இனி மாற்றப்படும். தற்போது உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமணை இயங்கி வரும் இடத்திற்கு இவ்வாண்டு இறுதிக்குள்ளாக மாற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஜார்ஜ் கோட்டை ஒரு காலத்தில் இந்திய அதிகார மையமாக விளங்குகியது. கிட்டத்தட்ட சமீபத்திய காலத்தில் அதாவது 2000 வது ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அப்படி ஓர் சூழல் ஏற்பட்டது. இந்திய அரசியல் தமிழக அரசியலை ஒட்டி இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது ஏற்பட்டிருந்தது.

அது தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள நிலையில் இவரோடு முடிவு பெறலாம். அதுபோலவே கருணாநிதி ஏற்படுத்தி வைத்த இடத்தில் இருந்து மீண்டும் ஸ்டாலின் தலைமையில் மறுபயன்பாட்டிற்கு வரலாம். அதே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மற்றோர் விஷயமும் உண்டு. அது அடுத்து ஆண்டு கருணாநிதி பிறந்த நாளுக்குள்ளாக கூவம் கழிமுனை உள்ள அவரது நினைவிடம் பல கோடி செலவில் மிக பிரமாண்டமாக எழுந்து நிற்கலாம். இவை எல்லாம் சரித்திரமா அல்லது சாகச அரசியலின் அரிச்சுவடியா என்பதெல்லாம் இனி வரவிருக்கும் காலங்களில் பதில் கிடைக்கலாம்.

விடியலை நோக்கிய பயணத்தில், பலரது வாழ்க்கை இருண்டு போகலாம். சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் பல சித்தாந்த மாறுதல்கள் ஏற்படலாம்; ஏற்படலாம் என்பதை விட அவசியம் மாற்றப்படும். பல சமய சிந்தனைகள் தொலைந்து போகலாம். இது ஆள்பவரின் விருப்பங்கள் மாத்திரம் அல்ல, அவரை ஆளவைப்பவர்களின் விருப்பங்களும் கூடத்தான். எது, எவையெல்லாம், எப்போது, எப்படி தொலைக்கப்போகிறோம், என்பதெல்லாம் யார் அறிவார்? எது எப்படியோ கீழ் மேலான தலைகீழ் மாற்றம் மாத்திரம் நிச்சயம். இந்த அவனியில், “மாற்றம் ஒன்றே மாறாதது. இவையும் கடந்து போகும்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *