ஐந்துமுறை முதலமைச்சராக(1969-2011) இருந்த ஒருவரின் மகன், தமிழ்நாட்டின் குறைகளை 100 நாட்களில் தீர்க்கிறேன் என்று மனு வாங்குகிறார். இது எவ்வளவு கேவலமான விசயம். இவரது தந்தை கருணாநிதி 6863 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து இருக்கிறார். இந்த நாட்களில் ஏன் கருணாநிதி எங்கள் பிரச்சனைகளை நீக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை.
இவர் மட்டும் எங்கள் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பார் என்றும் யாரும் நினைக்கவில்லை. இவற்றை பற்றி நான் எதை எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ஸ்டலினால் உங்களின் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாது என்பது மட்டும் உண்மை, என்று கூறியிருக்கிறார் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே.
இது ஓட்டு வாங்குவதற்கான ஒரு சூழ்ச்சி. மக்கள் தான் இதில் ஏமாறப் போகிறார்கள் என்று எனக்கு தெளிவாக தெரியும். திமுக தமிழ்நாட்டின் தீய சக்தி. தமிழர்களே இந்த சக்தி பல ரூபத்தில் உங்களிடம் வரும். உண்மை போல உங்களுக்கு தெரியும். ஆனால் உண்மையல்ல.
ஆகையால் திமுகவை இந்த தேர்தலில் தோற்கடித்து இந்த கட்சியை இந்த மண்ணில் இருந்து அகற்ற வேண்டும். இது உங்கள் சந்ததிக்கு மிகவும் நல்லது. கருணாநிதி ஆட்சி ஓரு பொற்காலம் எனும் ஸ்டாலினால், தன் தந்தையை போல ஒரு ஆட்சியை தருவேன் என்று கூறி வாக்கு கேக்க முடியவில்லை. பரிதாபம். எல்லாம் தெரிந்தும், அவர்களுக்கு வாக்களிக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.