அசிங்கப்பட்ட தாயநிதி மாறன், ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

அரசியல்

திமுக எம்.பி தயாநிதி மாறனை நாடாளுமன்ற கூட்ட தொடரில் வைத்து பாஜக இளம் எம்.பி தேஜஸ்வி சூர்யா மக்களவையில் பதிலடி கொடுத்த சம்பவம் இந்திய அளவில் மிக பெரும் அவமானத்தை திமுகவிற்கு தேடி தந்துள்ளது.

Image result for dmk

திமுக எம் பி தயாநிதி மாறன் நேற்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது அமெரிக்காவை போன்று இந்தியாவிலும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த பாஜக எம். பி தேஜாஸ்வி சூர்யா, பிரதமர் முன்பே உறுதி அளித்தது போன்று தடுப்பூசி முதலில் முன் கள பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும்.

இது புதிய இந்தியா, இதில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். ஒரு வேலை, பழைய இந்தியாவாக இருந்து இருந்தால் நீங்கள், உங்கள் தாத்தா, பாட்டி, ஸ்டாலின், உதயநிதி என உங்கள் குடும்பமே முதல் நபராக சென்று தடுப்பூசி போட்டு தப்பிக்க பார்த்து இருப்பீர்கள், என வெளிப்படையாக மக்களவையில் பேசினார்.

இந்த சம்பவம் இந்திய அளவில் பிரபலமடைந்து கடும் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளார் தயாநிதி. இந்த நிலையில்தான் நேற்று இரவில் திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, டெல்லியில் சுத்தமாக நம்மை மதிக்க மாட்டேன்கிறார்கள், சிறு வயதினரை கொண்டு சபையிலேயே குடும்ப கட்சி என கிண்டல் செய்கிறார்கள், கேண்டீன் பக்கம் செல்லவில்லையா என கேலி செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் நமது செல்வாக்கே டெல்லியில் இல்லாமல் போய்விடும் என வேதனைப்பட்டுள்ளாராம்.

தொடக்கத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, என பலரும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவினரை டெல்லியில் உரிய முக்கியத்துவத்துடன் நடத்தியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் பிரதமர் மோடியை ஒருமையில் திமுக தலைவர்களே பேசுவதும், தயாநிதி மாறன் திருடன் என பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசியது, ஆகிய சம்பவத்திற்கு பின்பு டெல்லியில் திமுகவினரை கண்டாலே விரட்டி அடிக்கிறார்களாம் பாஜகவினர். இதனால் இப்போது என்ன செய்வது என தெரியாமல் திமுக எம்.பி கள் டெல்லியில் அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளனர் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *