நிவர் புயலை கரையை கடந்து தற்பொழுது புரெவி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலாய் தீபகற்ப பகுதியில், சராசரி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், அதன் காரணமாக தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்னும் என்ன என்ன நடக்க காத்திருக்கோ இந்த 2020-இல் என்ற அச்சத்தில் மக்கள்.