மாணவர்கள் தற்கொலையை சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துகின்றனர்.! மாணவி தற்கொலை குறித்து பேராசிரியர் கருத்து.!

மதுரையில் மாணவி ஜோதி ஸ்ரீ தற்கொலை செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பொது செயலாளர் பேராசிரியர், ஸ்ரீநிவாசன், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தொடர்ந்து பேசி வரும் தமிழக்தத்தை சேர்ந்த அரசியல் காட்சிகள்,இது போன்ற மாணவர்களின் தற்கொலையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொண்ட பேராசிரியர், 17 வயதில் தான் வளர்த்த குழந்தை தற்கொலை செய்து கொண்டால் அந்த பெற்றோர்களின் நிலை என்ன, என்பதை உணர்ந்தே தான் பேசுவதாக தெரிவித்தவர்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர், தற்போது நிறைய பொது தேர்வுகள், போட்டி தேர்வுகள் நடைபெறுகிறது, அணைத்து தேர்வுகளையும் போட்டி போட்டு தான் எதிர் கொள்ள வேண்டும், தற்கொலை செய்து கொள்வதால் ஒரு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால், இனி வரும் காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வை எதிர் கொள்ள அச்சப்பட்டு தற்கொலை செய்து கொண்டால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டுமா.? என கேள்வி எழுப்பிய பேராசிரியர்.

மேலும், தேர்வு முறைக்கு மாணவர்களை தாயார் படுத்த வேண்டும், பெறோர்கள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்க கூடாது, தேர்தலை சந்திப்பதில் மாணவர்களுக்கு அச்சம் ஏற்படக்கூடாது, இது குறித்து பிரதமர் மோடி, பரிச்சைக்கு பயமேன் என்ற தலைப்பில் புத்தகம் ஓன்று வெளியிட்டுள்ளார் அதில், தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களை எப்படி தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார், இந்த புத்தகத்தை அணைத்து மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்ட பேராசிரியர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர, ஒரு தற்கொலையின் அடிப்படையில் ஒரு தேர்வை ரத்து செய்யவேண்டும் என கூறுவது பொறுப்பற்ற செயல் என்றும், நீட் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் அதே போன்று தேர்வு எழுதும் மாணவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுப்பதை தவிர்த்து, தேர்வை எதிகொள்ள தங்களை அச்சமற்றவர்களாக தயார் படுத்தி கொள்ளவேண்டும் என்றும்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தமிகத்தில் மட்டும் ஏன் தற்கொலை நடக்கிறது என்று சிந்திக்க வேண்டும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் கூட தற்கொலை சம்பவம் நடைபெறாத போது தமிழக்தில் மட்டும் தற்கொலை ஏன் நடக்கிறது? என கேள்வி எழுப்பியவர், இதை ஆத்ம பரிசோதனை செய்து, தமிழக மாணவர்களின் மனநிலையில் அக்கறை செலுத்த வேண்டும் என பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கேட்டுக்கொண்டார்.

மாணவி தற்கொலையில் திமுக அரசியல்.! உண்மையை உரக்க சொன்ன இயக்குனர் சேரன் கருத்து.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *