நீட் வந்தபிறகு தற்கொலைகள் குறைந்துள்ளது.! புள்ளி விவரங்களுடன் ஆதாரத்தை வெளியிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.!

மாணவர்கள் தற்கொலை சம்பவத்தை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் நீட் தேர்வு வந்த பின் தான் தற்கொலை நிகழ்வதாக நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்து வருகின்றனர், மேலும் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சில ஊடகங்கள் நீட் தேர்வு வருவதற்கு முன் மாணவர்களின் தற்கொலை விவரம் குறித்தும், நீட் தேர்வு வந்த பின் நிகழும் தற்கொலை விவரத்தையும் மக்களுக்கு தெரிய படுத்தாமல், திட்டமிட்டு மறைத்து வரும் நிலையில்.

பிரபல மூத்த பத்திரிகை ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான துக்ளக் பத்திரிகை இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இது குறித்து புள்ளி விவரங்களுடன் சில தகவலை வெளியிட்டுள்ளார் அதில், தமிழகத்தில் நீட் காரணமாக 3 தற்கொலைகள் நடந்ததை வைத்து பொய் விவாதம் நடக்கிறது. உண்மையில் நீட் வந்தபிறகு தேர்வு காரணமாக நடக்கும் தற்கொலைகள் குறைந்து இருக்கின்றன. தமிழகத்தில் 2015 இல் தேர்வு காரணமாக தற்கொலை 322. 2019 இல் 215 (NCRB Reports 2015 & 2019 on accidental deaths & suicides), பரீட்சை, அதன் முடிவு காரணமாக தற்கொலை பொதுவான பிரச்சினை. அதில் மகாராஷ்டிரா முதல் இடம். தமிழகம் இரண்டாவது.

எனவே நீட் காரணமாகத்தான் தற்கொலை தற்கொலை துவங்கி இருப்பது போல பிரச்சாரமும் விவாதமும் நடப்பது துரதிர்ஷ்டம். பரிட்சைகளால் தற்கொலை நடக்கிறது என்றால் பரிட்சையே வேண்டாமா? டெல்லியில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மணவன் 8 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான். அது அரசியல் பிரச்சினை ஆகவில்லை. காதல் தோல்வியால் இறப்பவர்கள் எண்ணிக்கை 656. (2019 NCRB data) பரீட்சையை போல 3 மடங்கு.

தற்கொலை காரணமான தேர்வை வேண்டாம் என்றால் அதை விட 3 மடங்கு குற்றவாளியான காதலை என்ன செய்வது? அதை ஊக்குவிக்கும் வாலண்டைன் தினத்தை என்ன செய்வது. இதை பற்றி அரசியல்வாதிகள் கருத்து கூற மாட்டார்கள். சாராயம்/போதை மருந்து காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 2012 இல் 242. 2014 இல் 522. 2016 இல் 722. 2019 இல் 1042. 7 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்து இருக்கிறது.

பரீட்சையை போல இதை பற்றியும் அரசியல்வாதிகள் கருத்து கூறினால் நல்லது. மாட்டார்கள். அரசியல்வாதிகளை விடுங்கள். மூன்று நீட் தற்கொலைகளை பிரபலப்படுத்திய, டிவி சேனல்கள் பத்திரிகைகள் அறிவுஜீவிகள் இந்த உண்மைகளை என் மறைக்கிறார்கள். பொய் செய்திகளுக்கு மகத்துவம் கொடுத்து வியாபாரம் செய்யத்தானே. இந்த பொய்களையெல்லம் தாண்டி உண்மை வெளிவர வேண்டும். இது தான் இன்றைய நிலை என மூத்த பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் சூர்யா.! நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய ஆயத்தம்.! சூர்யாவின் விளம்பர யுக்தியா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *