அஞ்சலக ஆன்லைன் கோடை கால முகாம்: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

தமிழகம்

சிறப்பு தபால் தலை சேகரிப்பதை குழந்தைகளின் மனதில் ஒரு பொழுதுபோக்காக விதைக்க, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம், 2021 மே  மாதத்தில் ஆன்லைன் முறை மூலம் ”கோடை கால முகாமை” பின்வரும் அமர்வுகளில் ஏற்பாடு செய்துள்ளது :

எண்.அமர்வுகள்காலம்நேரம்
1.தொகுதி 105.05.2021 – 07.05.2021காலை 10.30 – 12.30
2.தொகுதி 211.05.2021 – 13.05.2021காலை 10.30 – 12.30
3.தொகுதி 319.05.2021 –  21.05.2021காலை 10.30 – 12.30
4.தொகுதி 426.05.2021 –  28.05.2021காலை 10.30 – 12.30

தற்போதைய கொவிட் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு விண்ணப்ப கடைசி தேதி 30.04.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (முன்பு கடைசி தேதி 20.04.2021-ஆக இருந்தது.) கடைசி தேதிக்குப் பிறகு அளிக்கப்படும் விண்ணப்பம் ஏற்கப்படாது.

8 முதல் 14 வயதிற்குட்பட்ட ஆர்வமுள்ள குழந்தைகள் (31.03.2021 தேதியின்படி) ஒரு நபருக்கு ரூ.250/- பதிவு கட்டணமாக செலுத்தி இந்த முகாமில் சேரலாம். நுழைவுக் கட்டணத்தை, காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம், “தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002” என்ற பெயருக்கு அனுப்ப வேண்டும். நுழைவுக் கட்டணத்தை விண்ணப்பத்துடன் (குழந்தையின் பெயர், பெற்றோர், அல்லது பாதுகாவலரின் பெயர், மொபைல் எண், வயது, முகவரி, மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி, வகுப்பு, காசோலை அல்லது டிடியின் விவரங்கள்) விரைவுத்தபால் / பதிவுத்தபால் மூலமாக மட்டுமே “தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நுழைவுக் கட்டணம் பின்வருவனவற்றிற்கு பயன்படுத்தப்படும் :

  • பங்கேற்பாளரின் பெயரில் புதிய தபால் தலை கணக்கில் வரவு வைக்கப்படும். புதிய நினைவு முத்திரைகள், தொகை உள்ள வரை பங்கேற்பாளருக்கு அனுப்பப்படும். மேலும், எதிர்காலத்தில் பங்கேற்பாளர்கள் தங்கள் கணக்கில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
  • மேலும் கோடைக்கால முகாமிற்கு தேவையான தபால்தலை பொருட்கள் பங்கேற்பாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

தொகுதிகள் / அமர்வுகள் அண்ணா சாலை தபால் நிலையத்தால் மட்டுமே ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட தொகுதிகள் / அமர்வுகள் மற்றும் கோடைக்கால முகாமுக்காக உருவாக்கப்பட்ட “Link for webinar” மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

கோடைக்கால முகாம் முடிந்ததும், பங்கேற்பாளர்களுக்கு தபால் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும். எந்தவொரு கேள்விகளுக்கும் தயவுசெய்து (M) 9600113460 மற்றும் 044-28543199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்தத் தகவல், சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி திரு.சு.குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *